கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்!!

 

கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்!!

தமிழக அரசின் கல்வி டிவியில் புதிய பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்.

கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது . ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளாதவர்களுக்கு என அரசின் கல்வி தொலைக்காட்சியில் வகுப்பு வாரியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்ற கல்வி ஆண்டில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட நிலையில், 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தற்போது மாணவர்கள் நடப்பு கல்வியாண்டிற்கு வந்துள்ளதால் புதிய பாடங்கள் எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்!!

இந்நிலையில் தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளன.தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் நடப்பாண்டுக்கான வகுப்புகளை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். புதிய கல்வி ஆண்டுக்கான பாடங்களை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்குவதையும் தொடங்கி வைக்கிறார்.