பட்டா பதிவு செய்வதில் வந்திருக்கும் புதிய மாற்றம் இதுதான்!

 

பட்டா பதிவு செய்வதில் வந்திருக்கும் புதிய மாற்றம் இதுதான்!

கொரோனா நோய்த் தொற்று கார்ணமாக நாடே ஸ்தம்பித்துக் கிடைக்கிறது. கொரோனா பரவலின் தன்மையைக் கொண்டு அந்தந்தப் பகுதிகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப் படுகின்றன. அப்படித்தான் அவசரப் பணி அல்லாத அரசு அலுவலகங்கள் மூடிகிடந்தன. அவை ஒவ்வொன்றாக இயங்கத் தொடங்கியுள்ளன. ஆயினும் அங்கே சமூக இடைவெளி பின்பற்ற வேண்டியது அவசியம் என வலியுறுத்தப் படுகிறது.

பட்டா பதிவு செய்வதில் வந்திருக்கும் புதிய மாற்றம் இதுதான்!

தமிழ்நாட்டில் பத்திரப் பதிவு செய்வது ஏராளம் முடங்கிக் கிடைந்தது, அதனால், அரசுப் பதிவுத் துறை அலுவலகங்கள் இயங்க நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
தற்போது பத்திரப் பதிவில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

அதாவது ஒரு நிலத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும்போது அது பட்டா மாறுதல் அடைந்துவிடும். இந்த திட்டத்தின் கீழ் ஒரே சர்வே எண்களில் உட்பிரிவு இல்லாத சொத்துக்கள் இருந்தால் பத்திர பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யப்படுகிறது.

பட்டா பதிவு செய்வதில் வந்திருக்கும் புதிய மாற்றம் இதுதான்!

இந்தப் புதிய நடைமுறை காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஒன்றியத்தில்தான் முதன்முதலாகச் சோதனை அடிப்படையில் செய்துபார்க்கப்பட்டது. அது நல்ல பலனைத் தந்தது, பொதுமக்களிடம் இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

அதனால், காஞ்சிபுரம், கலவை, உத்திரமேரூர், நெம்மேலி ஆகிய ஒன்றியங்களுக்கும் இந்தத் திட்டம் செயல்முறைக்கு வந்திருக்கிறது. விரைவில் தமிழ்நாடு முழுவதும் நடைமுறைக்கு வரக்கூடும் என்று தெரிவிக்கிறார்கள்.