”ஸ்நாப்டிராகன் பிராசருடன் புதிய சி15 போன் – ரியல்மி அறிமுகம்” !

 

”ஸ்நாப்டிராகன் பிராசருடன் புதிய சி15 போன் – ரியல்மி அறிமுகம்” !

கடந்த ஆகஸ்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சி15 மாடல் ஸ்மார்ட்போனை, குவால்காம் ஸ்நாப்டிராகன் பிராச சருடன் மீண்டும் புதிய வடிவில் ரியல் மி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

சி15 மாடல் போன் கடந்த ஆகஸ்டில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அது மீடியா டெக் ஹீலியோ பிராசசரில் இயங்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அதே போனை தற்போது குவால்காம் ஸ்நாப்டிராகன் 460 பிராசசருடன் ரியல்மி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதே சமயம் போனின் சிறப்பம்சத்தில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை.

”ஸ்நாப்டிராகன் பிராசருடன் புதிய சி15 போன் – ரியல்மி அறிமுகம்” !

6.5 இன்ச் எச்டி பிளஸ் திரை, 6000 எம்ஏஎச் பேட்டரி, பின்புறத்தில் 13 எம்பி கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் உள்பட மொத்தம் நான்கு கேமராக்களும், முன்புறத்தில் 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவும் கொண்டு அறிமுகமாகி உள்ளது. மேலும் பின்புறத்தில் விரல் ரேகை சென்சார் முன்புறத்தில் பேஸ் அன்லாக் வசதி, ஆண்டிராய்ட் 10 இயங்குதளம் என சகல சிறப்பம்சங்கள் உள்ளடக்கி ஸ்நாப்டிராகன் 460 பிராசசருடன் புதிய சி15 போன் அறிமுகமாகி உள்ளது.

”ஸ்நாப்டிராகன் பிராசருடன் புதிய சி15 போன் – ரியல்மி அறிமுகம்” !

பவர் புளூ மற்றும் பவர் சில்வர் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த போன் 3ஜிபி ரேம்- 32 ஜிபி மெமரி மாடல் 9,999 ரூபாய்க்கும், 4ஜிபி ரேம் – 64 ஜிபி மெமரி மாடல் 10,499 ரூபாய்க்கும் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி ஆன்லைன் தளத்திலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

  • எஸ். முத்துக்குமார்