IPL போட்டி நடக்கும் ஐக்கிய அமீரகத்தில் கொரோனாவுக்காக புதிய தடை

 

IPL போட்டி நடக்கும் ஐக்கிய அமீரகத்தில் கொரோனாவுக்காக புதிய தடை

ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் சில மணிநேரங்களே இருக்கின்றன. இதற்காக கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பே வீரர்கள் வந்து, கொரோனா பரிசோதனை செய்துகொண்டு பயிற்சி எடுத்து வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் குழுவில் 13 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்ததும் பதறினார்கள். தற்போது அவர்கள் கொரோனாவிலிருந்து மீண்டு பயிற்சி எடுத்து வருகிறார்கள். கொரோனா பாதித்த தீபக் சாஹர் இன்றைய போட்டியில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPL போட்டி நடக்கும் ஐக்கிய அமீரகத்தில் கொரோனாவுக்காக புதிய தடை

ஐக்கிய அமீரகத்தில் கொரோனா கட்டுக்குள் இருந்தது. ஆனால், திடீரென்று சில நாட்களாகப் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செப்டம்பர் 12 –ம் தேதி புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 1000 –த்தைத் தாண்டியது.

ஐக்கிய அமீரகத்தில் இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு 83,433 பேர். இவர்களில் 72,790 பேர் குணமடைந்து விட்டார்கள். சிகிச்சை பலன் அளிக்காது 403 பேர் இறந்துவிட்டார்கள்.

கொரோனாவின் பாதிப்பு அதிகமாவதால் ரஷ்யா கொரோனா தடுப்பூசியை முன்கள வீரர்களுக்குச் செலுத்தும் முடிவுக்கு ஐக்கிய அமீரகம் வந்திருக்கிறது. அதேபோல பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

IPL போட்டி நடக்கும் ஐக்கிய அமீரகத்தில் கொரோனாவுக்காக புதிய தடை

பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பும் ஒருவர், அதற்கு ஒருநாள் முன்பே கொரோனா பரிசோதனை செய்வது அவசியம். அதேபோல கல்யாணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளில் பத்து பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதித்திருக்கிறது அந்நாட்டு அரசு.

ஐபிஎல் நடைபெறும் இந்தச் சூழலில் அங்கு கொரோனா பரவல் அதிகரிப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஐபிஎல் நிர்வாகம் விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.