“நாங்களும் வீட்டிலே இருந்தா உங்க நிலைமை ..” -எச்சரிக்கும் இந்திய மருத்துவர் சங்கம் .

“நாங்களும்  வீட்டிலே இருந்தா உங்க நிலைமை ..” -எச்சரிக்கும் இந்திய மருத்துவர் சங்கம் .

இந்திய மருத்துவர் சங்கம் இந்த கொரானா நேரத்தில் மத்திய அரசிடம் மருத்துவர்களை ,ராணுவ வீரர்களுக்கு இணையாக அரசு நடத்த வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளது .

கொரானா பாதிப்பில் இன்னும் சில மாதங்களில் இந்தியா உலகில் முதலிடத்தை எட்டுமென்றும் ,இதனால் இந்த இக்கட்டான நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் சேவை ராணுவ வீரர்களுக்கு இணையாக போற்றப்படவேண்டுமென்று இந்திய மருத்துவ கவுன்சில் கோரிக்கையை வைத்துள்ளது .

“நாங்களும்  வீட்டிலே இருந்தா உங்க நிலைமை ..” -எச்சரிக்கும் இந்திய மருத்துவர் சங்கம் .

மேலும் அந்த கௌன்சில் கூறுகையில் நம் நாட்டில் வைரஸ் பாதிப்பால் 307 டாக்டர்கள் உயிரிழந்துள்ளார்க ளென்றும் ,2006 சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களென்றும் ,எனவே கொரானாவால் உயிரிழந்த மருத்துவர்களை ராணுவ வீரர்களுக்கு இணையாக போற்றப்பட வேண்டுமென்றும் இறந்த மருத்துவர்களின் வாரிசுகளுக்கோ இல்லை குடும்பத்தினருக்கோ உடனடியாக அரசு வேலை தரவேண்டுமென்றும் அது கோரியுள்ளது .
மேலும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் மன அழுத்தம் ,மற்றும் பாதுகாப்பு குறித்து மாவட்ட நிர்வாகம் அக்கறை கொண்டதாக தெரியவில்லையென்று அது கூறி, மருத்துவர்களின் உயிரிழப்பை ராணுவ வீரர்களின் தியாகத்துக்கு இணையாக மதிக்கப்படவேண்டுமென்று அந்த கவுன்சில் கோரிக்கை வைத்துள்ளது .

“நாங்களும்  வீட்டிலே இருந்தா உங்க நிலைமை ..” -எச்சரிக்கும் இந்திய மருத்துவர் சங்கம் .