கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக 99.9 சதவிகிதம் செயல்படும் மருந்து கண்டுபிடிப்பு!

 

கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக 99.9 சதவிகிதம் செயல்படும் மருந்து கண்டுபிடிப்பு!

கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக 99.9 சதவிகிதம் அளவுக்கு செயல்படும் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக நேரடி மருந்து இல்லை. அது ஏற்படுத்தும் பாதிப்பை கட்டுப்படுத்துவது, முந்தைய வைரஸ் கிருமிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட டேமிஃபுளு, ரெம்டெசிவிர் போன்ற மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் நுரையீரல் தொற்றை போக்க ஸ்டீராய்டு மருந்துகள் வழங்குவது வேறு விதமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக 99.9 சதவிகிதம் செயல்படும் மருந்து கண்டுபிடிப்பு!

கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக தற்போது பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், அவை எல்லாம் முதியவர்கள் மத்தியில் சோதனை செய்யப்பட்டவையாக, 70 முதல் 90 சதவிகிதம் வரை பலன் அளிக்கக் கூடியதாக உள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள தடுப்பூசியை போட்டுக்கொண்ட பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் பலர் உயிரிழந்தாலும் கொரோனா காரணமாக உயிரிழக்கவில்லை அரசாங்கங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில்  siRNA (small-interfering RNA) என்ற தொழில்நுட்பத்தின் படி புதிய கொரோனா மருந்தை அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் இணைந்து உருவாக்கியுள்ளனர். இந்த மருந்து கொரோனா கிருமியின் மரபணுவை நேரடியாக தாக்கி, அது பல்கி பெருகுவதை தடுத்து நிறுத்தும். இவை 99.9 சதவிகிதம் வரை கிருமிக்கு எதிராக செயல்பட்டு அவற்றை அழிக்கும். இந்த மருந்தை ஐந்து நாட்களுக்கு நோயாளிகளுக்கு ஊசி மூலம் செலுத்த வேண்டியிருக்கும்.

தற்போது விலங்குகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் வைரஸ் கிருமியை இந்த மருந்து 99.9 சதவிகிதம் வரை அழிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் மனிதர்களிடம் இந்த மருந்து சோதனை செய்யப்படும். விலங்குகளுக்கு செலுத்தும் போது 99 சதவிகிதம் சாதகமான முடிவு வந்தது போன்று மனிதர்களிடம் செலுத்தும்போது வருமா என்பது கேள்விக்குறிதான். இருப்பினும் பரிசோதனை செய்தால்தான் முடிவுகள் தெரியவரும். மனிதர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தாது, நோய்த் தொற்றை நீக்கும் என்று உறுதியான பிறகு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விரைவாக சோதனையை நடத்தி மக்கள் பயன்பட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் ஏராளமான உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்.