புதிய வேளாண் சட்டங்கள் : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

புதிய வேளாண் சட்டங்கள் : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புதிய வேளாண் சட்டங்கள் : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்ரமணியன் அமர்வு வழக்கை விசாரித்தது.பின்னர் இன்றைய விசாரணையின் முடிவில், இதுகுறித்து 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

புதிய வேளாண் சட்டங்கள் : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

முன்னதாக விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அத்துடன் 3 வேளாண் சட்டங்களுக்கு சட்டவிரோதமானது, செல்லாது என அறிவிக்கக்கோரி திமுக எம்.பி. திருச்சி சிவா, ராஷ்டிரிய ஜனதா தள எம்பி மனோஜ்குமார் ஜா உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.