” புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் ” -கே .என். நேரு வலியுறுத்தல்

” புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் ” -கே .என். நேரு வலியுறுத்தல்

வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து திருச்சியில், திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக முதன்மை செயலாளர் கே. என். நேரு , அந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

” புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் ” -கே .என். நேரு வலியுறுத்தல்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

” புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் ” -கே .என். நேரு வலியுறுத்தல்

திருச்சியில், மாவட்ட ஆட்சியர் அலுவகம் அருகே , கே. என். நேரு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

” புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் ” -கே .என். நேரு வலியுறுத்தல்

அப்போது பேசிய கே.என். நேரு, மத்திய மாநில அரசுகளின் ஊக்கத்தொகையும், குறைந்தபட்ச ஆதார விலையும் விவசாயிகளுக்கு நல்ல வாய்ப்பாக இருந்து வந்தது. அதனை மாற்றி
விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் புதிய வேளாண் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்தார். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களே இருக்காது என்றும், விளை பொருளுக்கு நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலைதான் கிடைக்கும் என்றும் கூறினார். விவசாயிகளை பாதிக்கும் இந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் எனவும் கே.என்.நேரு வலியுறுத்தினார்.