கோபி நகர திமுக சார்பில் ணைய வழிஉறுப்பினர் சேர்க்கை முகாம்

 

கோபி நகர திமுக சார்பில் ணைய வழிஉறுப்பினர் சேர்க்கை முகாம்

கோபிசெட்டிபாளையம் நகர திமுக சார்பில் நடைபெற்ற இணைய வழி
உறுப்பினர் சேர்க்கை முகாமை வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் துவக்கி வைத்தார்.

கோபி நகர திமுக சார்பில் ணைய வழிஉறுப்பினர் சேர்க்கை முகாம்

எல்லோரும் நம்முடன் என்ற முழக்கத்துடன் திமுக வின் தலைமைக்கழகம் இணைய
வழியில் உறுப்பினர்கள் சேரும் திட்டத்தை துவங்கியுள்ளது. இத்திட்டம் துவங்கியது
முதல் இன்று வரை இணைய வழியில் 1 லட்சத்து 30 ஆயிரம் உறுப்பினர்கள்
இணைந்துள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து ஈரோடு வடக்கு மாவட்ட
திமுக சார்பில் இணைய வழியில் உறுப்பினர்களை சேர்க்கும் முகாம்
கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இம்முகாமை வடக்கு
மாவட்ட செயலாளர் நல்லசிவம் துவக்கி வைத்த பின் புதிதாக இணைந்த இளைஞர்களுக்கு
உறுப்பினர் அட்டையை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். நூற்றுக்கும்
அதிகமான ஆண்களும் பெண்களும் இணைய வழியில் உறுப்பினராக தங்களை
இணைத்துக்கொள்ள ஆர்வத்துடன் முகாமிற்கு வந்திருந்தனர்.

கோபி நகர திமுக சார்பில் ணைய வழிஉறுப்பினர் சேர்க்கை முகாம்

இந்நிகழ்ச்சியில்
கோபிசெட்டிபாளையம் நகர செயலாளர் நாகராஜ் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள்
உட்பட பலர் கலந்து கொண்டு புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு பொன்னாடை
அணிவித்து வாழ்த்துக்களை தெரித்தனர்