“ஆயிரம் ரூவா சம்பாரிக்க வக்கில்லையா?” – மக்களை நோக்கி கேப்டன் மகன் ஆணவ பேச்சு!

“ஆயிரம் ரூவா சம்பாரிக்க வக்கில்லையா?” – மக்களை நோக்கி கேப்டன் மகன் ஆணவ பேச்சு!

இன்று இந்தளவிற்கு மீம்ஸ்கள் பறந்துகொண்டிருக்கிறதென்றால் அதற்கு முதற் புள்ளி போட்டது தேமுதிக தலைவர் விஜயகாந்தாக தான் இருப்பார். அவர் அளவிற்கு கன்டென்ட் கொடுத்தது யாராகவும் இருக்க முடியாது. பிரச்சார மேடைகளில் கோபமாகப் பேசுவதாகட்டும் கிரேஸியாக பண்ணுவதாகட்டும் எல்லாவற்றிலும் கன்டென்ட் கொடுத்தவர் தான் கேப்டன். அந்த காலக்கட்டத்தில் அரசியலில் அவர் அளவிற்கு யாரும் ட்ரோல் மெட்டிரீயலாகி இருக்க மாட்டார்கள். அவரிடம் நற்குணங்கள் இருந்தாலும் அது ஒரு பிளாக் மார்க்காகவே இருந்தது.

“ஆயிரம் ரூவா சம்பாரிக்க வக்கில்லையா?” – மக்களை நோக்கி கேப்டன் மகன் ஆணவ பேச்சு!

தற்போது தந்தையை அடியொற்றி எதையாவது உளறிக் கொட்டி இணையத்தில் நெட்டிசன்களிடம் வாங்கி கெட்டிக் கொள்கிறார் விஜயபிரபாகரன். அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதற்கு முன் ஆங்காங்கே அதிமுக தலைவர்களை வம்பிழுத்த விஜயபிரபாகரன் அதற்குப் பின் ருத்ரதாண்டவம் மோடுக்கு போய்விட்டார் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அதிமுக தலைவர்களைத் திட்டி தீர்த்தார். இப்போதும் அதுவே தொடர்கிறது. இவ்வளவு நாளும் அரசியல் தலைவர்களிடம் மட்டுமே வேலையைக் காட்டிய அவர் தற்போது மக்களிடம் வேலையைக் காட்டியிருக்கிறார்.

“ஆயிரம் ரூவா சம்பாரிக்க வக்கில்லையா?” – மக்களை நோக்கி கேப்டன் மகன் ஆணவ பேச்சு!

சத்தியமங்கலம் புதிய பேருந்து நிலையத்தில் பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதி தேமுதிக வேட்பாளரை ஆதரித்து விஜய பிரபாகரன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “தற்போது 1,500 ரூபாய் தருகிறேன் எனக் கூறுபவர்கள் கொரானா காலத்தில் மக்கள் கெஞ்சியும் பணத்தைத் தரவில்லை. நூறுக்கும், சோறுக்கும், பீருக்கும் விலை போகாதீர்கள். உங்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வக்கில்லையா?” எனக் கடுமையாகப் பேசினார்.

“ஆயிரம் ரூவா சம்பாரிக்க வக்கில்லையா?” – மக்களை நோக்கி கேப்டன் மகன் ஆணவ பேச்சு!

மேற்குறிப்பிட்ட பேச்சில் பாதி சரியாக இருந்தாலும் வாக்களிக்கும் மக்களிடம் எப்படி பேச வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூடவா தெரியாது என உட்கட்சிக்குள்ளேயே முணுமுணுக்கிறார்கள். இப்படியே பேசுனா வெங்கல கிண்ணம் கூட கிடைக்காது என்பதே மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.