‘வெண்கல நாயகி’ பி.வி சிந்துவின் சாதியை தேடிய நெட்டிசன்கள்!

 

‘வெண்கல நாயகி’ பி.வி சிந்துவின் சாதியை தேடிய நெட்டிசன்கள்!

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் சாதியை நெட்டிசன்கள் கூகுளில் தேடியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து வெண்கலப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற பிவி சிந்து, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் வெண்கலம் வென்று தொடர்ந்து இருமுறை பேட்மிண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற வரலாறு படைத்துள்ளார்.

‘வெண்கல நாயகி’ பி.வி சிந்துவின் சாதியை தேடிய நெட்டிசன்கள்!

ஒலிம்பிக் போட்டியில் தர வரிசையில் 7வது இடத்தில் இருந்த சீன வீராங்கனையை எதிர்த்து களமிறங்கிய பி.வி சிந்து, அதிரடியாக விளையாடி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். பி.வி.சிந்துவை எதிர்த்து விளையாடிய சீன வீராங்கனை ஜியோவுடன் 15 முறை பி.வி சிந்து போட்டியிட்டிருக்கிறார். அதில், 9 முறை தோல்வியையே தழுவிய பி.வி.சிந்து ஒலிம்பிக் 2020ல் அவரை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.

‘வெண்கல நாயகி’ பி.வி சிந்துவின் சாதியை தேடிய நெட்டிசன்கள்!

பி.வி.சிந்துவின் வெற்றியை இந்திய மக்கள் தங்களது வெற்றியாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தெலுங்கானாவை சேர்ந்த பி.வி.சிந்துவின் சாதனையை பாராட்டும் விதமாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ரூ.30 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளார். இந்த நிலையில், இந்தியாவே தூக்கிக் கொண்டாடும் பி.வி.சிந்துவின் சாதியை நெட்டிசன்கள் கூகுளில் தேடியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரியோ ஒலிம்பிக்ஸில் பி.வி சிந்து வெள்ளிப்பதக்கம் வென்ற போது கூட அவரது சாதி குறித்து தேடப்பட்டது பேசுபொருளானது என்பது குறிப்பிடத்தக்கது.