முதற் ’கண்’ நன்றி!- முதல்வரை பாராட்டும் நெட்டிசன்கள்

 

முதற் ’கண்’ நன்றி!- முதல்வரை பாராட்டும் நெட்டிசன்கள்

முதல்வருக்கு முதற்’கண்’ நன்றி… ட்விட்டரில் பதிவாகி இருக்கிறது இந்த ஹேஷ்டேக். அத்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் மனிதநேயத்தை பல்வேறு தரப்பிலும் பறைசாற்றியுமிருக்கிறது.
கண்தானம் பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இதை எப்படி செய்ய வேண்டும், இதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது பற்றி பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.

முதற் ’கண்’ நன்றி!- முதல்வரை பாராட்டும் நெட்டிசன்கள்


இந்த குறைபாட்டைப் போக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில், கண்தானம் செய்ய விரும்புபவர்களுக்கு உதவிடும் நோக்கத்தோடு http://hmis.tn.gov.in/eye-donor என்ற இணையதளத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தொடங்கிவைத்தார்.

இந்த இணையதளத்தில் கண் தானம் செய்வது தொடர்பான வழிமுறைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கண்தானம் செய்பவர்கள், தானம் பெறுபவர்கள் என பலரும் பயன்பெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வின்போதுதான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திடீர் இன்ப அதிர்ச்சியாக அவருடைய கண்களைத் தானம் செய்வதாக தெரிவித்ததுடன், அதற்கான உறுதிமொழி சான்றிதழை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார்.


இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், ‘பார்வையின்றி தவிக்கும் ஒளியிழந்தோருக்கு செய்திடும் கண் தானமானது, தானத்தில் சிறந்தது. அப்புனிதமான கண் தானத்தின் பயனறிந்து, எனது கண்களை தானமாக வழங்குவதற்கான உறுதிமொழியினை அளித்ததையடுத்து, அதற்கான சான்றிதழை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் அவர்களிடம் வழங்கினேன்’ என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களிடையே கண் தானத்தை ஊக்குவிக்கும் வகையில், முதல்வர் முன்னுதாரணமாக தனது கண்களை தானம் செய்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

முதற் ’கண்’ நன்றி!- முதல்வரை பாராட்டும் நெட்டிசன்கள்

எடப்பாடி பழனிச்சாமியின் இந்த மனிதநேய செயலுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக பல்வேறு தரப்பினரும் டுவிட்டர் பக்கத்தில் #முதல்வருக்குமுதற்கண்நன்றி என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு வருகின்றனர்.

ஒளியற்ற விழிகளுக்கு ஒளியாகி இவ்வுலகை காணச்செய்திட அனைவரும் மனுமுவந்து கண்தானம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தும் தேசிய கண் தான நாளையொட்டி கண்தானம் செய்வதில் உளமார மகிழ்ச்சி கொள்கிறேன்.

அனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டுமென இந்நாளில் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

கண்தானம் செய்வோம்!

— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) September 7, 2020

அது மட்டுமல்ல, பிறருக்கு நன்மை செய்ய வேண்டும், என்கிற உயர்ந்த நோக்கோடு தனது கண்களை தானம் செய்துள்ள முதல்வர் பழனிசாமி வழியில் நானும் எனது இருவிழிகளையும் தானம் செய்துள்ளேன் என்று பலர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கண் தானம் செய்த சான்றிதழைப் பதிவிட்டும் வருகின்றனர்.

முதற் ’கண்’ நன்றி!- முதல்வரை பாராட்டும் நெட்டிசன்கள்


இது பற்றி முதல்வருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘’ அடிப்படையில் ஒரு விவசாயியான தனக்குக் காலம் கொடுத்துள்ள இந்த மிகப் பெரிய பொறுப்பால் மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறார். அத்துடன் மக்கள் அளித்துவரும் பேராதரவும் அவரை பூரிப்படையச் செய்திருக்கிறது. இந்த மக்களுக்கு நல்லதை செய்துகொண்டே இருக்க வேண்டும் என்கிற எண்ணம்தான் அவரிடம் இப்போது மேலோங்கியிருக்கிறது. கண் தானம் என்பது இதன் ஒரு சின்ன வெளிப்பாடுதான்’’ என்கிறார்கள்.