தொடர்ந்து குறையும் மான் கி பாத் டிஸ்லைக்… யூடியூபும் பா.ஜ.க சார்பா என கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!

தொடர்ந்து குறையும் மான் கி பாத் டிஸ்லைக்… யூடியூபும் பா.ஜ.க சார்பா என கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!

பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமை பேசிய மனதின் குரல் எனப்படும் மான்கி பாத் யூடியூப் வீடியோவுக்கு அளிக்கப்பட்ட டிஸ்லைக் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து குறையும் மான் கி பாத் டிஸ்லைக்… யூடியூபும் பா.ஜ.க சார்பா என கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!

பிரதமர் மோடியின் மான் கி பாத் பேச்சை பா.ஜ.க தன் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிட்டது. இந்த யூடியூப் பதிவுக்கு பலரும் டிஸ்லைக் செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டிஸ்லைக் செய்த நிலையில் திடீரென்று பல ஆயிரக் கணக்கில் டிஸ்லைக் குறைய ஆரம்பித்தது.

தொடர்ந்து குறையும் மான் கி பாத் டிஸ்லைக்… யூடியூபும் பா.ஜ.க சார்பா என கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!

திடீரென்று ஒரு லட்சம் அளவுக்கு டிஸ்லைக் குறையவே நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த தகவல் சமூக ஊடகங்களில் வைரல் ஆகவே, பலரும் வம்படியாக டிஸ்லைக் செய்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். தற்போது லட்சக் கணக்கில் டிஸ்லைக் குறைந்தது எப்படி என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். பா.ஜ.க-வுடன் இணைந்து யூடியூப் (கூகுள்) நிறுவனம் செயல்படுகிறதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், ஒரு கட்சி சார்புடன் செயல்பட்டு டிஸ்லைக் எண்ணிக்கையைக் குறைத்த யூடியூப் நிறுவனத்துக்கு கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.