“பல கோடி இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கியவர் நேதாஜி ” – முதல்வர் பழனிசாமி புகழாரம்!

 

“பல கோடி இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கியவர்  நேதாஜி ” – முதல்வர் பழனிசாமி புகழாரம்!

நேதாஜியின் 125வது பிறந்தநாளையொட்டி முதல்வர் பழனிசாமி அவர் குறித்த பதிவினை வெளியிட்டுள்ளார்.

இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவர் நேதாஜி. இரண்டாம் உலகப் போரின் போது இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அதை தலைமையேற்றி நடத்தி காட்டிய சாகசக்காரர். வங்காளத்தை சேர்ந்த சிங்கம், 1939 மதுரை மாநாட்டில் பேசும் போது, நான் மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறப்பேன் என முழங்கியது இன்றளவும் சிலிர்ப்பூட்டும் வாக்கியமாகவே உள்ளது.

“பல கோடி இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கியவர்  நேதாஜி ” – முதல்வர் பழனிசாமி புகழாரம்!

இந்நிலையில் நேதாஜியின் 125-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய விடுதலை போரில் தனது தீரம் மிக்க பேச்சாலும் செயலாலும் பல கோடி இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிய திருமகனார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125வது பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன். ஜெய்ஹிந்த்! ” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக இருந்த வீரத்திருமகன், தாய்நாட்டின் மீது கொண்ட பாசத்திற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்த தேசத்தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாள் இன்று! “இன்னொரு பிறவி எடுத்தால் அதில் தமிழனாக பிறக்க வேண்டும்” என்று அறிவித்து தமிழர்களையும் நம் தமிழக மண்ணையும் மனதார நேசித்த மாவீரர் நேதாஜியின் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம்! ” என்று குறிப்பிட்டுள்ளார்.