குடியரசு தலைவர் திறந்தது நேதாஜி படமா? நேதாஜி ரோலில் நடித்தவரின் படமா?

 

குடியரசு தலைவர் திறந்தது நேதாஜி படமா? நேதாஜி ரோலில் நடித்தவரின் படமா?

குடியரசு தலைவர் திறந்துவைத்தது நேதாஜியின் படமா அல்லது கும்னாமி என்ற திரைப்படத்தில் நேதாஜியாக நடித்தவரின் படமா என்ற விவாதம் ட்விட்டரில் எழுந்துள்ளது.

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125ஆவது பிறந்தநாள் கடந்த ஜனவரி 23ஆம் தேதி கொண்டாடப்பட்டது. நேதாஜியின் பெருமையைப் போற்றும் வகையில் குடியரசு தலைவர் மாளிகையில் அவரது திருவுருவ படத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார்.

இது குடியரசு தலைவரின் ட்விட்டர் பக்கத்திலும் பகிரப்பட்டது. தற்போது இந்தப் படம் தான் சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக இருக்கிறது. அந்தப் படம் உண்மையான நேதாஜியின் புகைப்படம் அல்ல; கும்னாமி என்ற திரைப்படத்தில் நேதாஜியாக நடித்த புரோசென்ஜித் சட்டர்ஜியின் புகைப்படம் என கலாய்த்து ட்விட்டர்வாசிகள் ட்வீட்களை பறக்கவிட்டனர்.

https://twitter.com/Joydas/status/1353603988269109256?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1353603988269109256%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fnetaji-subhash-chandra-bose-or-actor-prosenjit-chatterjee-who-played-him-president-ram-nath-kovind-house-portrait-stirs-new-row-2357746

இந்த விவகாரம் வைரலானதை தொடர்ந்து பாஜக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. “நேதாஜியின் குடும்பத்திடம் அவருடைய உண்மையான படம் வாங்கப்பட்டது. அதன்பின், பத்மஸ்ரீ விருதுபெற்ற ஓவியக் கலைஞர் பரேஷ் மைட்டி கைவண்ணத்தில் உருவான படத்தைத் தான் குடியரசு தலைவர் திறந்துவைத்தார். ஆனால், அதுகுறித்து தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். இது தேவையற்ற விவாதம்; கண்டனத்திற்குரியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேதாஜியும் புரோசென்ஜித் சட்டர்ஜியும் ஒரே போல தெரிந்தால், நேதாஜியாக சட்டர்ஜியை காண்பித்த மேக்அப் கலைஞரை தான் நாம் பாராட்ட வேண்டும் என்று ஒருசிலர் கருத்து கூறிவருகின்றனர்.