வருவாய் சூப்பர்… லாபம் சுமார்… நெஸ்லே இந்தியா

 

வருவாய் சூப்பர்… லாபம் சுமார்… நெஸ்லே இந்தியா

நெஸ்லே இந்தியா நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் லாபமாக ரூ.587 கோடி ஈட்டியுள்ளது.

பிரபலமான மேகி நூடுல்ஸ், மில்கி பார் சாக்லேட் உள்பட பல்வேறு நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவமான நெஸ்லே இந்தியா தனது செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. நெஸ்லே இந்தியா நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் லாபமாக ரூ.587 கோடி ஈட்டியுள்ளது. 2019 செப்டம்பர் காலாண்டில் ரூ.595.3 கோடியை லாபமாக நெஸ்லே இந்தியா நிறுவனம் ஈட்டியிருந்தது.

வருவாய் சூப்பர்… லாபம் சுமார்… நெஸ்லே இந்தியா
நெஸ்லே மில்கி பார் சாக்லேட்

2020 செப்டம்பர் காலாண்டில் நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் வருவாய் 10.1 சதவீதம் அதிகரித்து ரூ.3,541.7 கோடி ஈட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் காலாண்டில் நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளபோதிலும், வரி செலவினம் உயர்ந்ததால் அந்நிறுவனத்தின் லாப வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருவாய் சூப்பர்… லாபம் சுமார்… நெஸ்லே இந்தியா
நெஸ்லே இந்தியா

நெஸ்லே இந்தியா நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு இடைக்கால டிவிடெண்டாக ரூ.135 அறிவித்துள்ளது. நெஸ்லே இந்தியா நிறுவனம் அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் நம் நாட்டில் மேலும் ரூ.2,600 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.