பெண்களை அதிகளவில் வேலைக்கு எடுக்கும் நெஸ்லே இந்தியா..

 

பெண்களை அதிகளவில் வேலைக்கு எடுக்கும் நெஸ்லே இந்தியா..

பிரபல மேகி நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே இந்தியா நிறுவனம் பெண்களை அதிகளவில் எடுத்து வருவதாக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனா சுரேஷ் நாராயணன் தெரிவித்தார்.

நுகர்பொருள் துறையை சேர்ந்த நெஸ்லே இந்தியா நிறுவனம் இந்தியாவில் தற்போது 8 ஆலைகளை நடத்தி வருகிறது. தற்போது குஜராத் மாநிலம் சனந்தில் 9வது ஆலையை தொடங்க உள்ளது. இந்த ஆலையில் நெஸ்லே இந்தியா நிறுவனம் தனது பிரபல தயாரிப்பான மேகி நூடுல்ஸை தயாரிக்க உள்ளது. இந்த ஆலையில் பணிபுரிய இருக்கும் மொத்த பணியாளர்களில் 62 சதவீதம் பேர் பெண்களாக இருப்பார்கள் என தகவல்.

பெண்களை அதிகளவில் வேலைக்கு எடுக்கும் நெஸ்லே இந்தியா..
நெஸ்லே இந்தியா

நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனா சுரேஷ் நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாலினம் பன்முகத்தன்மை முயற்சியின் ஒரு பகுதியாக நிறுவனத்தில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. நாங்கள் இந்த விவகாரத்தில் நியாயமாக செயல்படுகிறோம். 2015ம் ஆண்டு நான் நெஸ்லே இந்தியா நிறுவனத்துக்கு வந்தபோது, அந்த நேரத்தில் நிறுவனத்தில் பணியாற்றிய மொத்த பணியாளர்களில் 15 முதல் 16 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள்.

பெண்களை அதிகளவில் வேலைக்கு எடுக்கும் நெஸ்லே இந்தியா..
சுரேஷ் நாராயணன்

நாங்கள் தற்போது அதனை 23 சதவீதமாக உயர்த்தியுள்ளோம். இது முடிவல்ல, இதை விட நாங்கள் சிறப்பாக செய்ய விரும்புகிறோம். உண்மையில் கடந்த 2020ம் ஆண்டில் நிறுவனத்துக்கு நாங்கள் செய்த ஆட்சேர்ப்பில் 42 சதவீதம் பேர் பெண்களே. இந்த போக்கு இந்த ஆண்டும் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.