நெஸ்லே இந்தியா லாபம் ரூ.602 கோடி.. இடைக்கால டிவிடெண்டாக ரூ.25 அறிவிப்பு

நெஸ்லே இந்தியா லாபம் ரூ.602 கோடி.. இடைக்கால டிவிடெண்டாக ரூ.25 அறிவிப்பு

நெஸ்லே இந்தியா நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் லாபமாக ரூ.602.25 கோடி ஈட்டியுள்ளது.

பிரபலமான மேகி நூடுல்ஸ், மில்கி பார் சாக்லேட் உள்பட பல்வேறு நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவமான நெஸ்லே இந்தியா தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. நெஸ்லே இந்தியா நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் லாபமாக ரூ.602.25 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 மார்ச் காலாண்டை காட்டிலும் 14.6 சதவீதம் அதிகமாகும்.
அந்த காலாண்டில் நெஸ்லே இந்தியா நிறுவனம் லாபமாக ரூ.525.43 கோடி ஈட்டியிருந்தது.

நெஸ்லே இந்தியா லாபம் ரூ.602 கோடி.. இடைக்கால டிவிடெண்டாக ரூ.25 அறிவிப்பு
நெஸ்லே மேகி

நெஸ்லே இந்தியா நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.3,610.82 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 8.6 சதவீதம் அதிகமாகும். நெஸ்லே இந்தியா நிறுவனம் ஜனவரி-டிசம்பர் காலத்தை நிதியாண்டாக கொண்டு செயல்படுகிறது.

நெஸ்லே இந்தியா லாபம் ரூ.602 கோடி.. இடைக்கால டிவிடெண்டாக ரூ.25 அறிவிப்பு
நெஸ்லே இந்தியா

நெஸ்லே இந்தியா நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.25 இடைக்கால டிவிடெண்டாக ( 2021ம் நிதியாண்டுக்கு) அறிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, நெஸ்லே இந்தியா நிறுவன பங்கின் விலை 0.02 சதவீதம் குறைந்து ரூ.17,086.25ஆக குறைந்தது.