நெஸ்லே இந்தியா லாபம் ரூ.483 கோடி.. பங்கு ஒன்றுக்கு டிவிடெண்டாக ரூ.65 அறிவிப்பு..

 

நெஸ்லே இந்தியா லாபம் ரூ.483 கோடி.. பங்கு ஒன்றுக்கு டிவிடெண்டாக ரூ.65 அறிவிப்பு..

நெஸ்லே இந்தியா நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் லாபமாக ரூ.483.3 கோடி ஈட்டியுள்ளது.

பிரபலமான மேகி நூடுல்ஸ், மில்கி பார் சாக்லேட் உள்பட பல்வேறு நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவமான நெஸ்லே இந்தியா தனது டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. நெஸ்லே இந்தியா நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் லாபமாக ரூ.483.3 கோடி ஈட்டியுள்ளது. இது 2019 டிசம்பர் காலாண்டை காட்டிலும் 2.25 சதவீதம் அதிகமாகும்.

நெஸ்லே இந்தியா லாபம் ரூ.483 கோடி.. பங்கு ஒன்றுக்கு டிவிடெண்டாக ரூ.65 அறிவிப்பு..
நெஸ்லே

2020 டிசம்பர் காலாண்டில் நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் வருவாய் ரூ.3,432.6 கோடி ஈட்டியுள்ளது. இது 2019 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 9 சதவீதம் அதிகமாகும். கடந்த டிசம்பர் காலாண்டில் நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.2,793 கோடியாக உயர்ந்துள்ளது. 2019 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 8.3 சதவீதம் அதிகமாகும்.

நெஸ்லே இந்தியா லாபம் ரூ.483 கோடி.. பங்கு ஒன்றுக்கு டிவிடெண்டாக ரூ.65 அறிவிப்பு..
நெஸ்லே இந்தியா தயாரிப்புகள்

நெஸ்லே இந்தியா நிறுவனம் ஜனவரி-டிசம்பர் காலத்தை நிதியாண்டாக கொண்டு செயல்படுகிறது. நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு 2020 டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த கடந்த நிதியாண்டுக்கு இறுதி டிவிடெண்டாக நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.65 அறிவித்துள்ளது.