• November
    17
    Sunday

Main Area

Main



சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு சின்னத்திரைக்கு தாவத் தயாராகும் நேசமணி வடிவேலு...

வடிவேலு
வடிவேலு

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு படப்பிடிப்பில் கூட கலந்துகொள்ளாமல் வீட்டிலும் ஆபிசிலும் வெட்டியாய் பொழுதுப்போக்கிக்கொண்டிருக்கும் வைகைப்புயல் வடிவேலு மிக விரைவில் சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு வெப் சீரீஸ்களுக்கு தாவ யோசித்து வருவதாகத் தெரிகிறது.

கடந்த 1988ம் ஆண்டு தொடங்கிய வடிவேலுவின் சினிமா பயணம் கடந்த 2017ம் ஆண்டு வந்த மெர்சல் படத்துடன் தற்காலிகமாக நின்றுள்ளது. கை வசம் எந்த படமும் இல்லாத நிலையில், வடிவேலு நடிக்கும் ’இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் 2ம் பாகம் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றுவிட்டது. மேலும், வடிவேலு நடிக்க இருந்த படங்களில் இருந்தும் அவர் கழற்றிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், வடிவேலுவிற்கு சினிமாவில் நடிக்கவும் தடை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில், நேற்று முன் தினம்  நடந்த நடிகர் சங்கத் தேர்தலுக்கு வடிவேலு வாக்களிக்க வரவில்லை. தனக்கு ஒரு பிரச்சினை வந்தபோது உதவிக்கு ஒரு நடிகரும் இறங்கி வரவில்லை என்ற ஆத்திரத்தில் இருக்கும் வடிவேலு இனியும் வீட்டில் சும்மா இருந்தால் நம்மை மக்கள் மறந்துவிடுவார்கல் என்ற எண்ணத்தில் தற்போது சினிமாவுக்கு இணையாக பிரபலமாகி வரும் வெப் சீரீஸ்களில் விரைவில் நடிக்கக்கூடும் என்றும் அது சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நடந்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2018 TopTamilNews. All rights reserved.