‘நெல்லையப்பருக்கு மூலிகைத் தைல காப்பு’ மேற்கு மற்றும் வடக்கு வாசல் விரைவில் திறப்பு!

 

‘நெல்லையப்பருக்கு மூலிகைத் தைல காப்பு’ மேற்கு மற்றும் வடக்கு வாசல் விரைவில் திறப்பு!

நெல்லையப்பர் கோயிலில் மூலிகைத் தைல காப்பு நிகழ்ச்சியை உடனடியாக நடத்த அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

‘நெல்லையப்பருக்கு மூலிகைத் தைல காப்பு’ மேற்கு மற்றும் வடக்கு வாசல் விரைவில் திறப்பு!

தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஊரடங்கு தளர்வுகளை அனைத்து மாவட்டத்திற்கும் ஒரே மாதிரியாக அறிவித்தார். அத்துடன் வருகின்ற 12ஆம் தேதி வரை ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு தளர்வுகளில் முக்கியமானதாக பார்க்கப்பட்டது வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டது தான். வழிபாட்டு தலங்கள் அனைத்து மாவட்டத்திலும் திறக்கப்பட்டதுடன் பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்ய முற்பட்டனர். அதனால் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் கோயிலில் குடமுழுக்கு, அர்ச்சனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘நெல்லையப்பருக்கு மூலிகைத் தைல காப்பு’ மேற்கு மற்றும் வடக்கு வாசல் விரைவில் திறப்பு!

இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்த நிலையில் , “தமிழகத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட தொன்மை வாய்ந்த கோயில்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோயிலில் உள்ள வெள்ளி தேர் புனரமைக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்குள் தேரோட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோயிலின் மேற்கு மற்றும் வடக்கு வாசல் 10 நாளில் திறக்க உத்தரவிட்டுள்ளேன்.சுவாமி நெல்லையப்பருக்கு நடைபெற்றுவந்த மூலிகைத் தைல காப்பு நிகழ்ச்சியை உடனடியாக நடத்த அறநிலையத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார். 2004இல் பூட்டப்பட்ட இரண்டு வாசல்களையும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்க அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது