Home தமிழகம் தமிழகத்தில் குறைகிறதா பாதிப்பு?.. நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் கொரோனா விவரங்கள் இதோ!

தமிழகத்தில் குறைகிறதா பாதிப்பு?.. நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் கொரோனா விவரங்கள் இதோ!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்கான தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தான் வருகின்றன. அதே போல கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மாவட்ட நிர்வாகங்கள், பாதிப்புக்கு ஏற்றாற்போல அந்தந்த பகுதிகளில் ஊரடங்கை நீடித்து வருகின்றனர். இதனிடையே ஒவ்வொரு மாவட்டமாக முதல்வர் பழனிசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இது ஒரு புறமிருக்க, இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் மருந்தின் முதற்கட்ட பரிசோதனை வெற்றி அடைந்ததையடுத்து, இரண்டாம் கட்ட பரிசோதனையாக சில நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் சாதகமாகவே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நெல்லை, திருப்பத்தூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகி இருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் மேலும் 164 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 7,012 ஆக உயர்ந்துள்ளது. அதே போல, புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 130 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 3,664 ஆக உயர்ந்துள்ளது. மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிப்பு 1,799 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று பாதிப்பு குறைவாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்திகள்

Most Popular

‘தமிழ்நாடு நாள்’- முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

நவ.1 தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட உள்ளதை ஒட்டி முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து தமிழகத்துடன் 1956, நவ.1ம் தேதி...

பிரான்ஸில் லாக்டெளனும்… மிக நீளமான டிராபிக் சிக்கலும்

கொரோனாவில் கோரப்பிடிக்குள் உலகமே சிக்கித் தவிக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய கொரோனாவின் பரவல் இப்போது உலகில் அனைத்து நாடுகளிலும் அச்சத்தை விளைவித்து வருகிறது.

‘நீங்க பேசுன பேச்சுக்கு..’ அனிதா சம்பத்தை கைத்தட்டி பாராட்டும் கமல்ஹாசன்: கடுப்பாகும் சுரேஷ்!

பிக் பாஸ் சீசன் 4ன் இன்றைய நிகழ்ச்சிக்கான 2ஆவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் விஜயதசமி கொண்டாட்டம் நடைபெற்ற போது அனிதா சம்பத்துக்கும், சுரேஷுக்கும்...

கார் டிரைவருக்கும், சொத்துக்கும் ஆசைப்பட்டு மாமனார், கணவர், கொழுந்தனை கொலை செய்த மேனகா

சென்னைக்கு அருகே இருக்கும் படப்பை நரியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுப்பராயன், தன் மகன்கள் செந்தில்குமார், ராஜ்குமாருக்கு கடந்த 2016ம் ஆண்டில் சொத்துக்களை பிரித்துக்கொடுத்துள்ளார். இதில் தம்பிக்கு அதிக சொத்துக்களை பிரித்துக்கொடுத்துவிட்டதாக...
Do NOT follow this link or you will be banned from the site!