கொரோனா உறுதியானதால் விபரீத முடிவு… நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை

 

கொரோனா உறுதியானதால் விபரீத முடிவு… நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை

கொரோனா உறுதியான நிலையில் நெல்லையின் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியின் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங்கின் மருமகனுக்கு சமீபத்தில் கொரோனா உறுதியானது. அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதன் அடிப்படையில் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், இருட்டுக்கடை உரிமையாளர் ஹரிசிங்குக்கும் கொரோனா உறுதியானது. இதனால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட இருந்தார்.

கொரோனா உறுதியானதால் விபரீத முடிவு… நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலைகொரோனா உறுதியான தகவல் அறிந்ததுமே ஹரிசிங் சோகத்தில் இருந்துள்ளார். அவர் அருகில் வர மற்றவர்கள் அச்சப்பட்டுள்ளனர். இதனால், அறைக்குள் சென்று தாழ்ப்பாள் போட்டுக்கொண்ட ஹரிசிங், தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் பாதுகாப்பாக உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். அவருடைய உடல் அரசு வழிகாட்டுதல் அடிப்படையில் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை தொடர்பாக திருநெல்வேலி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனா உறுதியானதால் விபரீத முடிவு… நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலைஹரிசிங் மரணத்தைத் தொடர்ந்து அவர் வசித்து வந்த பகுதி, இருட்டுக்கடை அல்வா விற்பனை செய்யும் இடங்களில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங்கின் தற்கொலை நெல்லை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.