நெல்லை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்.. 1500 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 4,231 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் பாதிப்பு அதிகமாகி வருவதால், அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதல் படுக்கை வசதிகள், கூடுதல் உபகரணங்கள், சிறப்பு மருத்துவமனை முகாம்கள் என கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அதிவேகமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் மக்கள் வெவ்வேறு மாவட்டங்களுக்குப் புலம் பெயர ஆரம்பித்த நிலையில், மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு பன்மடங்காக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மதுரை, தேனி, கடலூர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் மேலும் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,500 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக நெல்லை மாநகர பகுதியில் மட்டுமே 52 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

நெல் ஈரமாக இருந்தாலும் கொள்முதல் செய்யப்படும் : அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் படி, சென்னை மட்டுமில்லாமல் திருவாரூர், கோவை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது....

`நள்ளிரவில் வேட்டை; சுட்டுக்கொல்லப்பட்ட வாலிபர்!’- ஊத்தரங்கரையில் நடந்த பயங்கரம்

நள்ளிரவில் மான் வேட்டைக்கு சென்ற வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஊத்தரங்கரையில் நடந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ளது இளவம்பாடி காப்புக்காடு பகுதியில் அதிகமாக மான்,...

“திருட போன இடத்தில செல்போனை விட்டு சென்ற புது திருடர்கள்” -நகைக்கடை கொள்ளையில் அன்று இரவே சிக்கினார்கள் .

தொழிலுக்கு புதுசா வந்த திருடர்கள் ஒரு நகைக்கடைக்குள் புகுந்து நகை ,பணத்தை திருடி செல்லும்போது அவர்களின் செல்போனை விட்டு சென்றதால், உடனே போலீசின் கையில் அவர்கள் சிக்கினார்கள் . டெல்லியின் உத்தம் நகர் பகுதியிலிருக்கும்...

தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி காய்கறி மற்றும் பூ மார்க்கெட் மூடல்!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின்...