நெல்லையில் மாற்றுத் திறனாளிகள் தகவல் மையம் திறப்பு!

 

நெல்லையில் மாற்றுத் திறனாளிகள் தகவல் மையம் திறப்பு!

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் மாற்று திறனாளிகள் வாக்களிக்க வசதியாக, பிரத்யேக தகவல் மையம் இன்று திறக்கப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நெல்லை மாவட்டத்தில் மாற்றுத்1 திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யேக தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

நெல்லையில் மாற்றுத் திறனாளிகள் தகவல் மையம் திறப்பு!

இதனை நெல்லை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான விஷ்ணு இன்று தொடங்கி வைத்தார். இந்த மையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்களிப்பது தொடர்பான சந்தேகங்களை போக்கவும், அவர்களின் புகார்களை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.தகவல் மையத்தை தொடங்கி வைத்த ஆட்சியர் விஷ்ணு, வீடியோ கால் மூலம் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் சந்தேகங்களை கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், பயிற்சி உதவி ஆட்சியர் அலர்மேல் மங்கை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாந்திகுளோரி எமரால்டு உள்ளிட்டோர் உடனிருந்தனர். உஉ