இந்திய கலாச்சார ஆய்வு குழுவில் தலித், சிறுபான்மையினர் புறக்கணிப்பு… கனிமொழி கண்டனம்!

 

இந்திய கலாச்சார ஆய்வு குழுவில் தலித், சிறுபான்மையினர் புறக்கணிப்பு… கனிமொழி கண்டனம்!


இந்தியாவின் 12 ஆயிரம் ஆண்டு பழமையை ஆய்வு செய்ய மத்திய அரசு அமைத்த கலாச்சார ஆய்வுக் குழுவில் சிறுபான்மையினர், தலித் இடம் பெறாதது ஏன் என்று கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய கலாச்சார ஆய்வு குழுவில் தலித், சிறுபான்மையினர் புறக்கணிப்பு… கனிமொழி கண்டனம்!


மத்திய கலாச்சார அமைச்சகம் இந்தியாவின் 12000 ஆண்டு பழமையான பாரம்பரியத்தை ஆய்வு செய்வதற்கான குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ஆர்க்கியாலஜிக்கல் சொசைட்டி தலைவர் கே.என்.தீக்‌ஷித் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சார்பு உள்ளவர்கள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளதாக நாடு முழுவதும் இருந்து கண்டனம் ஏழுந்து வருகிறது.

இந்த குழுவில் ஒரு தென்னிந்தியர் கூட இல்லை என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து தி.மு.க எம்.பி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள் பட்டியலை வெளியிட்டுப் பதிவிட்டுள்ளார். அதில், “இந்தியக் கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு நியமித்துள்ள குழுவில் ஏன் ஒரு சிறுபான்மையினர் கூட இடம்பெறவில்லை ?
சிறுபான்மையினரோ, தலித்துகளோ, இந்திய கலாச்சாரம் குறித்து பேசக்கூடாதா? அல்லது அவர்கள் தகுதியற்றவர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.