குறைவான மார்கே எடுத்த மாணவர்களுக்கு நீட் பயிற்சி – அமைச்சர் செங்கோட்டையன்

 

குறைவான மார்கே எடுத்த மாணவர்களுக்கு நீட் பயிற்சி – அமைச்சர் செங்கோட்டையன்

குறைவாக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 2 ஆம் முறையாக நீட் பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

குறைவான மார்கே எடுத்த மாணவர்களுக்கு நீட் பயிற்சி – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துவரும் சூழலில், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்த கோவையைச் சேர்ந்த தனியார் அமைப்பு 2021ஆம் ஆண்டிற்கும் பயிற்சி அளிக்க உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெரும் மாணவர்களுக்கு இலவசமாக இணையவழி நீட் பயிற்சி நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும், விருப்பம் உள்ள மாணவர்கள் https://t.co/eXCcQlp0sD என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 4 மணி நேரம் வகுப்பு மற்றும் 4 மணி நேரம் பயிற்சித் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைவான மார்கே எடுத்த மாணவர்களுக்கு நீட் பயிற்சி – அமைச்சர் செங்கோட்டையன்

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘நீட் தேர்வில் குறைவான மார்க் எடுத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் முறையாக ஆன்லைனில் நீட் பயிற்சி அளிக்கப்படும். பிளஸ் டூ முடித்த 9,438 மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்’ என்றார்.