நீட் முறைகேடு; மாணவர்களின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை!

நீட் முறைகேடு; மாணவர்களின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை!

நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

நீட் முறைகேடு; மாணவர்களின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை!

கடந்த ஆண்டு நீட் தேர்வில் பல மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்த நிலையில், வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. நீட் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சில மாணவர்கள் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர். ஆனால் அவர்களது பெற்றோர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

நீட் முறைகேடு; மாணவர்களின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை!

கடந்த பிப்ரவரி மாதம் மோசடி செய்து தேர்வெழுதிய 10 மாணவ, மாணவிகளின் 10 புகைப்படத்தை வெளியிட்ட சிபிசிஐடி போலீசார், அவர்களின் விவரங்களை கண்டுபிடிக்குமாறு பெங்களூரில் இருக்கும் ஆதார் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்த நிலையில், அந்த புகைப்படங்களை வைத்து மாணவர்களின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என ஆதார் ஆணையம் சிபிசிஐடியிடம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் முறைகேடு செய்வதற்கு உடந்தையாக இருந்த முக்கிய குற்றவாளியான, ரஷித் என்பவர் தலைமறைவாக இருப்பதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.