தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு இன்று மீண்டும் நீட் தேர்வு!

 

தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு இன்று மீண்டும் நீட் தேர்வு!

கொரோனா பாதிப்பால் தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்காக, இன்று பிற்பகல் நீட் தேர்வு மீண்டும் நடத்தப்பட உள்ளது.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த செப்.13ம் தேதி நடத்தி முடிக்கப்பட்டது. தேர்வில் கலந்து கொள்ள கிட்டத்தட்ட 16 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 13 லட்சம் பேர் மட்டுமே கலந்து கொண்டனர். கொரோனாவால் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரவு பிறப்பித்தது. அதன் படி, இன்று பிற்பகல் 2 மணி முதல் 5 வரை நீட் மறுதேர்வு நடைபெற உள்ளது.

தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு இன்று மீண்டும் நீட் தேர்வு!

இந்த தேர்வு முடிந்ததும், நீட் தேர்வுக்கான முடிவுகள் வரும் செப்.16ஆம் தேதி வெளியாகும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்தார். இதனிடையே அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் வரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடைக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது மனு இன்று அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.