சு.வெங்கடேசன் கடிதங்களால் பயன்பெறும் 11,600 நீட் மாணவர்கள் – மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் புகழாரம்!

சு.வெங்கடேசன் கடிதங்களால் பயன்பெறும் 11,600 நீட் மாணவர்கள் – மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் புகழாரம்!

நீட் முதுகலைத் தேர்வுகளுக்கான தமிழ்நாடு, புதுச்சேரி மையங்கள் ஆன்லைன் விண்ணப்பங்களுக்கான நேரம் தொடங்கி 4 மணி நேரத்திற்குள்ளாகவே நிரம்பிவிட்டது. இதைச் சுட்டிக் காட்டி சு. வெங்கடேசன் எம்பி, தேர்வர்கள் அனைவருக்கும் தமிழகம், புதுச்சேரியிலேயே மையங்கள் அமைக்கப்பட வேண்டுமென கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். அக்கோரிக்கையை தேசிய தேர்வுக் கழகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

சு.வெங்கடேசன் கடிதங்களால் பயன்பெறும் 11,600 நீட் மாணவர்கள் – மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் புகழாரம்!

அதன்படி தேசிய தேர்வுக் கழக நிர்வாக இயக்குநர் பவானிந்திரா லால் மார்ச் 3ஆம் தேதி அளித்த பதிலில், “அஞ்சல் முகவரி உள்ள மாநிலத்தில் மையத்தை ஒதுக்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். அது முடியாத பட்சத்தில் அருகில் உள்ள மாநிலங்களின் மையங்கள் ஒதுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

சு.வெங்கடேசன் கடிதங்களால் பயன்பெறும் 11,600 நீட் மாணவர்கள் – மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் புகழாரம்!

இதற்குப் பின் மார்ச் 8ஆம் தேதியன்று மீண்டும் கடிதம் எழுதிய சு. வெங்கடேசன் எம்பி, கோவிட் சூழலுக்கு தனி மனித விலகல் அவசியம்; ஆகவே மையங்களில் இட நெருக்கடி என்று கூறி கோவிட் சூழலில் தேர்வர்களை வெளி மாநிலங்களுக்கு பயணிக்கச் செய்வது முரணான அணுகுமுறையல்லவா என்று குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த தேசிய தேர்வுக் கழகத்தின் கடிதத்தில், “8,131 தமிழக தேர்வர்களுக்கும், 63 புதுச்சேரி தேர்வர்களுக்கும் ஏற்கனவே சம்பந்தப்பட்ட மாநிலத்திற்குள்ளேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு விட்டன. மொத்தம் 11,013 தேர்வர்களுக்கு தமிழகத்திலும், 603 தேர்வர்களுக்கு புதுச்சேரியிலும் அஞ்சல் முகவரிகள் உள்ளன.

சு.வெங்கடேசன் கடிதங்களால் பயன்பெறும் 11,600 நீட் மாணவர்கள் – மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் புகழாரம்!

அவர்கள் ஆன்லைன் பதிவின் போது தமிழக, புதுச்சேரி மையங்கள் கிடைக்காமல் மற்ற மையங்களுக்கு பதிவு செய்திருந்தனர். அவர்கள் அனைவருக்குமே தமிழக, புதுச்சேரி மையங்கள் கிடைக்க தேசிய தேர்வுக் கழகம் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும்” என உறுதியளித்துள்ளது. இதன்மூலம் 11,600 தமிழகத் தேர்வர்கள் பலன் பெறவுள்ளதாகவும், கோவிட் காலத்தில் அனாவசியப் பயணங்களைத் தவிர்த்து தமிழகம் புதுச்சேரியிலேயே தேர்வு எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி புகழாரம் தெரிவித்துள்ளது.