நீட் தேர்வு : தூக்கில் தொங்கிய வேலூர் மாணவி!

 

நீட் தேர்வு : தூக்கில் தொங்கிய வேலூர் மாணவி!

நீட் தேர்வு குறித்த அச்சத்தால் வேலூர் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு : தூக்கில் தொங்கிய வேலூர் மாணவி!

நீட் தேர்வினால் மாணவ – மாணவிகள் தொடர்ந்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவம் தமிழகத்தில் தொடர்கதையாகி விட்டது. தமிழகத்தை பொருத்தவரை நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வரும் நிலையில் மத்திய அரசு இதை காதில் வாங்கிக் கொள்வதாக தெரியவில்லை . சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் தமிழகத்திலிருந்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.இருப்பினும் இது தொடர்பாக எந்த முடிவும் மத்திய அரசால் அறிவிக்கப்படாத நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதில் தமிழக மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.

நீட் தேர்வு : தூக்கில் தொங்கிய வேலூர் மாணவி!

இருப்பினும் நீட் தேர்வில் தோல்வியடைந்து விட்டால் மருத்துவராக வேண்டும் என்ற கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் மாணவ – மாணவிகள் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களில் மூன்று மாணவ- மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மேட்டூரை சேர்ந்த மாணவன் தனுஷ் என்பவர் நீட் தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் , நேற்று அரியலூர் மாணவி கனிமொழி நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தால் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த மாணவி செளந்தர்யா தற்கொலை செய்துகொண்டார். மாணவி செளந்தர்யா நீட் தேர்வு தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.