நாளை நீட் தேர்வு! திருச்சியில் 22 மையங்களில் முன்னேற்பாடுகள் தீவிரம்

நாளை நீட் தேர்வு! திருச்சியில் 22 மையங்களில் முன்னேற்பாடுகள் தீவிரம்

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாளை நடைபெறுவதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 22 மையங்களில் முன்னேற்பாடுகள் தீவிரமாக உள்ளன.

நாளை நீட் தேர்வு! திருச்சியில் 22 மையங்களில் முன்னேற்பாடுகள் தீவிரம்

எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மாணாக்கர்கள் நலனில் அக்கறை கொண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் இதனை நடத்தக்கூடாது என்று அரசியல் கட்சியினர் மற்றும் மாணவர்கள் அமைப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில் தமிழகத்தில் நாளைய தினம் 238 மையங்களில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

நாளை நீட் தேர்வு! திருச்சியில் 22 மையங்களில் முன்னேற்பாடுகள் தீவிரம்

திருச்சி மாவட்டத்தில் 22 மையங்கள் நீட் தேர்வுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும், இத்தேர்வினை 9,500 பேர் எழுதுகின்றனர். 

நாளை நீட் தேர்வு! திருச்சியில் 22 மையங்களில் முன்னேற்பாடுகள் தீவிரம்

திருச்சி மாவட்டத்தில் நீட் தேர்வு நடைபெறும் மையங்களில் பணியாற்றும் அலுவலர்கள், அதிகாரிகளுக்கு பி.சி.ஆர் சோதனை அல்லது ஏற்கனவே செய்யப்பட்டு சோதனையில் நெகட்டிவ் வந்த அலுவலர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தேர்வு மையங்களில் கிருமிநாசினி முக கவசம் உள்ளிட்ட ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.