‘நீட் தேர்வுக்கு தடையில்லை’ 7 மாநிலங்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

 

‘நீட் தேர்வுக்கு தடையில்லை’ 7 மாநிலங்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி 7 மாநில அரசுகள் அளித்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அச்சத்திற்கு இடையே வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளது. இதனை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் தேர்வு ரத்து செய்யப்படாது என தேர்வு முகமை தெரிவித்து விட்டது. அதன் படியே, எதிர்ப்பு கிளம்பி வந்த ஜேஇஇ தேர்வும் கடந்த 1 ஆம் தேதி நடைபெற்றது. அதே போலவே நீட் தேர்வும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நீட் தேர்வுக்கு தடையில்லை’ 7 மாநிலங்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். கொரோனா அச்சத்தில் மாணவர்கள் தேர்வுகளை எப்படி எதிர்கொள்வார்கள் என காங்கிரஸ் தலைவருடன் ஆலோசித்த புதுச்சேரி, மேற்கு வங்கம் உப்பட 7 மாநில முதல்வர்கள், நீதிமன்றத்தை நாட முடிவெடுத்தனர். அதன் படி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யமாறு 7 மாநில அமைச்சர்கள் சீராய்வு மனுத்தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரிக்கக் கூடிய போதிய முகாந்திரம் இல்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள் நீட் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.