நாளை மறுநாள் நீட் தேர்வு! முழுவீச்சில் ஏற்பாடுகள்

 

நாளை மறுநாள் நீட் தேர்வு! முழுவீச்சில் ஏற்பாடுகள்

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பல தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நுழைவுத் தேர்வுகளளான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கப்படவில்லை. மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்த வந்தனர். ஆனால் தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இந்த தேர்வுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நீட் தேர்வுகள் வருகிற 13ஆம் தேதி நடைபெற உள்ளன. தேர்வு மையங்களின் பட்டியலையும், ஹால் டிக்கெட்டையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

நாளை மறுநாள் நீட் தேர்வு! முழுவீச்சில் ஏற்பாடுகள்

இந்நிலையில் நீட் தேர்வுக்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் சென்னை, திருச்சி, சேலம், நெல்லை, மதுரை, கோவை, கரூர், தஞ்சை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட 14 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 1,17,990 மாணவர்கள் நீட் தேர்வு எழுதவுள்ளனர். இந்தியாவில் மொத்தம் 16 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மிகப்பெரிய தேர்வு அறையில் 20 மாணவர்களுக்கு மட்டும் அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பிறகே தேர்வு அறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும், மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்துவர வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக மாணவர்களுக்கு அவரவர் சொந்த மாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.