நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்- இடைத்தரகர் ரஷீத் தேனி நீதிமன்றத்தில் சரண்

 

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்- இடைத்தரகர் ரஷீத் தேனி நீதிமன்றத்தில் சரண்

தேனி

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வந்த இடைத்தரகர் ரஷீத், தேனி மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு தேனி மாவட்ட அரசு‌ மருத்துவக் கல்லூரியில், நீட் தேர்வு மூலம் வெற்றிபெற்று சேர்ந்த சென்னையை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர் மீது ஆள்மாறாட்டம் செய்ததாக, கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு இமெயில் மூலம் புகார் வந்தது. இதுகுறித்து கல்லுாரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் குழு மேற்கொண்ட ஆய்வில், நீட் தேர்வின்போது மாணவரின் ஹால்டிக்கெட்டில் உள்ள போட்டோவும், கல்லூரியில் படிக்கும் மாணவருக்கும் இடையே வேறுபாடு இருப்பது தெரியவந்தது

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்- இடைத்தரகர் ரஷீத் தேனி நீதிமன்றத்தில் சரண்

இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தபட்ட மாணவர் மற்றும் அவரது பெற்றோரை அழைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில், அந்த மாணவர் திடீரென விடுமுறையில் சென்று விட்டார். தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து முதல்வர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் முறைகேடு உறுதியானதை அடுத்து, மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் கைதாகினர்.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்- இடைத்தரகர் ரஷீத் தேனி நீதிமன்றத்தில் சரண்

பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு நடைபெற்ற தொடர் விசாரணையில், அடுத்தடுத்து சென்னை, தர்மபுரி உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், அவரது பெற்றோர்கள் என இதுவரை 14 பேர் கைதாகி, பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர்.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்- இடைத்தரகர் ரஷீத் தேனி நீதிமன்றத்தில் சரண்

இந்த விவகாரத்தில் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த நீட் பயிற்சி மைய உரிமையாளரான ரஷீத் என்ற இடைத்தரகரை சிபிசிஐடி போலீசார் ஓராண்டு காலமாக தேடி வந்தனர். அவர் பெங்களூருவில் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில், நேற்று தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் சரணடைந்தார். அவரிடம் விசாரணை செய்த நீதித்துறை நடுவர், பின்னர் பெரியகுளம் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இடைத்தரகர் ரஷீத் கைது செய்யப்பட்டுள்தால், அவரது நீட் பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்களின் முறைகேடு சம்மந்தமான விபரம் விசாரணையில் வெளிவரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.