ஜூன் 2ஆம் வாரத்தில் நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் – அமைச்சர் செங்கோட்டையன்

 

ஜூன் 2ஆம் வாரத்தில் நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் – அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதே போல, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடந்து முடிந்து விட்டன. தற்போது விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா.. நீட் தேர்வு பயிற்சி வகுப்பு எப்போது தொடங்கும் என பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

ஜூன் 2ஆம் வாரத்தில் நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் – அமைச்சர் செங்கோட்டையன்

இந்நிலையில் இது குறித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், வரும் ஜூன் 2ஆவது வாரத்தில் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்றும் அதன் மூலம் தமிழகத்தில் உள்ள 7,300 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், பயிற்சி வகுப்புகள் 9 கல்லூரிகளில் 35 நாட்கள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.