நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: 7 மாநிலங்கள் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை!

 

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: 7 மாநிலங்கள் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை!

நீட் தேர்வை எதிர்த்து 7 மாநில அமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என தேர்வு முகமை தெரிவித்துவிட்டது. மேலும், எந்த காரணத்தை கொண்டும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படாது என்றும் மாணவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் தேர்வுகளை எழுத வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதற்கு மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜேஇஇ தேர்வு நடைபெற்றது.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: 7 மாநிலங்கள் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை!

இதனிடையே நீட் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், தேர்வுகளை ஒத்திவைக்கவோ அல்லது ரத்து செய்யவோ உத்தரவிட முடியாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் உடனான சந்திப்புக்கு பிறகு, நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர 7 மாநில அரசுகள் முடிவெடுத்தன. அதன் படி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநில அமைச்சர்கள் சீராய்வு மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான அந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அதில், மாணவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.