“ஒரே எறி… தப்பாத குறி” – ஃபர்ஸ்ட் அட்டம்ப்டிலேயே பைனலுக்குள் கால்பதித்த இந்திய வீரர்!

 

“ஒரே எறி… தப்பாத குறி” – ஃபர்ஸ்ட் அட்டம்ப்டிலேயே பைனலுக்குள் கால்பதித்த இந்திய வீரர்!

ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு பதக்கங்கள் தேடிவருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இன்றைய நாள் ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது. மல்யுத்த போட்டியில் 57 மற்றும் 86 கிலோ எடைப்பிரிவில் முறையே ரவிக்குமார் தஹியா, தீபக் புனியா ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளனர். குத்துச்சண்டையில் 69 கிலோ எடைப்பிரிவில் லோவ்லினா அரையிறுதியில் தோற்றாலும் வெண்கலப் பதக்கத்தை உறுதிசெய்துள்ளார். இதன்மூலம் இந்தியாவிற்கு மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளன.

Neeraj Chopra withdraws from Top Athletics Lucerne - Sportstar

தற்போது நான்காவது நற்செய்தியாக ஈட்டி எறிதல் பிரிவிலிருந்து கிடைத்திருக்கிறது. இன்று ஈட்டி எறிதல் போட்டிகளின் தகுதிச்சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா என்ற வீரர் களமிறங்கினார். 23 வயது இளம் வீரரான நீரஜ் கலந்துகொள்ளும் முதல் ஒலிம்பிக் போட்டி இதுவாகும். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தகுதிச்சுற்றில் வெற்றிகண்டு நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் இலக்காக 83.50 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிதல் வேண்டும். முதல் முயற்சியிலேயே வேகமாக ஓடிவந்து எறிந்த நீரஜ் இதனை பீட் செய்து 86.65 மீட்டர் தூரம் எறிந்து அசத்தியிருக்கிறார்.

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் உலகின் நம்பர் 1 வீரராக அறியப்படும் ஜெர்மனியின் வெட்டரை விட அதிக தூரம் எறிந்து அசத்தியிருக்கிறார் நீரஜ். வெட்டர் 85.64 மீட்டர் தூரம் வரை எறிந்தார். இவர் 90 மீட்டர் தூரம் எறியக்கூடியவர். இறுதிப்போட்டியில் வெட்டருக்கு நீரஜ் டஃப் பைட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய போட்டிகள், காமன் வெல்த் போட்டிகள், தெற்கு ஆசிய போட்டிகள், உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆகிய போட்டிகளில் இவர் ஐந்து தங்கம் பெற்றுள்ளார். ஒலிம்பிக்கிலும் தங்கம் வெல்வார் என்று அடித்து சொல்லப்படுகிறது. இறுதிப்போட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.