ஏன் இருக்கிறது என்று தெரியாத குடல்வால் ஏற்படுத்தும் பாதிப்பு… அறிகுறிகள் அறிவோம்!

 

ஏன் இருக்கிறது என்று தெரியாத குடல்வால் ஏற்படுத்தும் பாதிப்பு… அறிகுறிகள் அறிவோம்!

மனித உடலில் எதற்காக இருக்கிறது என்றே தெரியாமல் இருக்கும் ஒரு உறுப்பு குடல்வால். அதனால் பயன் இருக்கிறதா என்று தெரியவில்லை. சிலருக்கு அது தொல்லையாக மாறுவது மட்டும் தொடர்கிறது. சிறுகுடல் வந்து பெருங்குடலில் இணையும் இடத்தில் சிறிய வால் போன்ற குழாய் உள்ளது. இதைத்தான் குடல் வால் (Appendix) என்கிறோம். மனிதன் பரிணாம வளர்ச்சி அடைவதற்கு முன்பு குடல் வால் உணவு, நல்ல பாக்டீரியா சேமிக்கும் இடமாக இருந்திருக்கலாம். பரிணாம வளர்ச்சிக்குப் பிறகு அது தேவையில்லாத உறுப்பாக மாறியிருக்கலாம் என்று பல வித கருத்துக்கள் உள்ளன.

ஏன் இருக்கிறது என்று தெரியாத குடல்வால் ஏற்படுத்தும் பாதிப்பு… அறிகுறிகள் அறிவோம்!

இந்த குடல் வாலில் வீக்கம், நோய்த் தொற்று ஏற்படும்போது அது குடல் வால் அழற்சியாக (appendicitis) மாறுகிறது.  குடல்வால் வெடித்தால் கிருமித் தொற்று செரிமான மண்டலம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் வலி வந்த உடனேயே அதை அகற்றிவிடுவது நல்லது.

சிறுகுடலிலிருந்து பெருங்குடலுக்கு செல்லும் செரிக்கப்பட்ட உணவின் துணுக்குகள் குடல்வாலில் விழுந்து அடைப்பை ஏற்படுத்தும்போது குடல்வால் வீக்கம் வருகிறது.

குடல்வால் பாதிப்பு அறிகுறிகள்:

வலது வயிறு அல்லது வலதுபுறம் அடிவயிற்றில் திடீரென்று தாங்க முடியாத வலி ஏற்படும்

தொப்புளைச் சுற்றிய பகுதி அல்லது அடி வயிற்றில் திடீர் வலி ஏற்படும்

இருமலின் போது, நடக்கும் போது, உடல் லேசாக அசைந்தாலே கூட வலி மோசமாகும்

வாந்தி, குமட்டல் ஏற்படும்

பசியின்மை ஏற்படும்

குறைந்த காய்ச்சல் ஏற்படும். காய்ச்சல் பாதிப்பை மேலும் அதிகரிக்கச் செய்துவிடும்

மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படும்

வயிறு உப்புசம் ஏற்படும்

வாயுத் தொல்லை இருக்கும்

குடல் வால் பாதிப்பு ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக கர்ப்ப காலத்தில் குடல்வால் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. வயதைப் பொருத்து வலி ஏற்படுவதன் தீவிரம் மாறும்.