வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் வளர்க்க வேண்டும் – உ.பி அரசாங்கம் அதிரடி

வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் வளர்க்க வேண்டும் – உ.பி அரசாங்கம் அதிரடி

முருங்கைஇலை, முருங்கைக்காய், முருங்கைப்பூ ஆகிய அனைத்துமே மருத்துவ சக்தி கொண்டவை. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதோடு கல்லீரல் தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. அதோடு மட்டுமல்லாமல் புற்றுநோய் வரவிடாமல் பார்த்துக் கொள்ளும். ஆண்மை விருத்திக்கு முருங்கைக்காய் மிக,மிக நல்லது. முருங்கையானது ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. முருங்கை சம்பந்தமான பொருள்கள் பல நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் வளர்க்க வேண்டும் – உ.பி அரசாங்கம் அதிரடி

இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநில அரசு முருங்கையின் மகத்துவத்தை மக்கள் மத்தியில் கொண்டு போய்ச் சேர்க்க புதிய திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளது.அதன்படி கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் ஒரு முருங்கை மரத்தை வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.இதற்காக 1 கோடியே 7 லட்சத்து கோடி முருங்கை நாற்றுகளை உற்பத்தி செய்து அவற்றை மாநிலம் முழுவதும் நடுவதற்கும் ஏற்பாடாகியுள்ளது.

வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் வளர்க்க வேண்டும் – உ.பி அரசாங்கம் அதிரடி

முதல்வர் யோகி ஆதித்யாநாத் இது குறித்து மாநில வனத்துறையினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் “ஒவ்வொரு கிராமத்திலும் முருங்கையின் சத்துகள் குறித்து விளக்கிச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைப்பாட்டினைச் சரிசெய்வதற்காக முருங்கைக்காய் பயன் படும் விசயங்களைச் சொல்லி

வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் வளர்க்க வேண்டும் – உ.பி அரசாங்கம் அதிரடி

அவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ” எனக் கேட்டுக் கொண்டுள்ளளார். இதன்படி வனத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் முருங்கை மர வளர்ப்பு விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதில் ஏராளமான சமூக ஆர்வலர்களும் தாமகவே முன் வந்து விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.