அரியலூரில் உதயநிதிக்கு எதிர்ப்பு… அதிர்ச்சியில் தி.மு.க!

 

அரியலூரில் உதயநிதிக்கு எதிர்ப்பு… அதிர்ச்சியில் தி.மு.க!

அரியலூரில் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவன் உடலுக்கு அஞ்சலி செலுத்த உதயநிதி ஸ்டாலினுக்கு பா.ம.க-வினர் அனுமதி மறுத்த விவகாரம் தி.மு.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு காரணமாக மாணவன் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அ.தி.மு.க, தி.மு.க, பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சார்ந்தவர்கள் மாணவன் தற்கொலைக்கு இரங்கல் தெரிவித்தனர்.

அரியலூரில் உதயநிதிக்கு எதிர்ப்பு… அதிர்ச்சியில் தி.மு.க!

விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ரூ.25 ஆயிரமும், தி.மு.க சார்பில் ரூ.5 லட்சமும் வழங்கப்பட்ட நிலையில், பா.ம.க 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் மாணவன் குடும்பத்துக்கு ரூ.7 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு அல்லது அரசு சார்ந்த பணி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அரியலூரில் உதயநிதிக்கு எதிர்ப்பு… அதிர்ச்சியில் தி.மு.க!

இந்த நிலையில் மாணவன் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு கிளம்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவனின் உடலுக்கு மரியாதை செலுத்த அங்கிருந்த பா.ம.க-வினர் அனுமதிக்காமல் தகராறு செய்துள்ளனர். உடலுக்கு மரியாதை செலுத்தக்கூட பா.ம.க-வினர் அனுமதிக்காது அரசியல் செய்தது தி.மு.க-வினர் மத்தியில் கொந்தளிப்பை

அரியலூரில் உதயநிதிக்கு எதிர்ப்பு… அதிர்ச்சியில் தி.மு.க!

ஏற்படுத்தியது. இறுதி அஞ்சலி செலுத்த வேண்டிய இடத்தில் பிரச்னை வேண்டாம் என்று தி.மு.க நிர்வாகிகள் தொண்டர்களை அனுமதி செய்தனர். உதயநிதி ஸ்டாலின், மலர் மாலை வைக்க கேட்டும் மறுத்த பா.ம.க-வினர், உடலை இடுகாட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால், உதயநிதி ஸ்டாலினால் மாணவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லை.
பா.ம.க-வினர் உடலை எடுத்துச் சென்ற பிறகே உதயநிதி ஸ்டாலின் விக்னேஷின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறி ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.