நீட்: ஈரோடு மாவட்ட 400 மாணவ -மாணவிகளுக்கு சேலம், கோவையில் தேர்வு மையம்!

நீட்:   ஈரோடு மாவட்ட 400 மாணவ -மாணவிகளுக்கு சேலம், கோவையில் தேர்வு மையம்!

மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் என்னும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 3 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூலை 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் வைரஸ் வீரியம் தீவிரமாக இருந்ததால் மீண்டும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இருந்தாலும் திட்டமிட்டபடி நாளை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட்:   ஈரோடு மாவட்ட 400 மாணவ -மாணவிகளுக்கு சேலம், கோவையில் தேர்வு மையம்!

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுவிட்டன. நாளை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நீர் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு எழுத வரும் மாணவ-மாணவிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதனால் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதற்குத் தயாராகி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 400 மாணவ மாணவிகள் நீட்தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் அனைவரும் நாளை நீட் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக சேலம், கோயம்புத்தூரில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நீட்:   ஈரோடு மாவட்ட 400 மாணவ -மாணவிகளுக்கு சேலம், கோவையில் தேர்வு மையம்!