• February
    24
    Monday

Main Area

Main



சுத்தமான எண்ணெய் வேண்டுமா..? இனி வீட்டிலேயே தயார் செய்து கொள்ள வந்து விட்டது இயந்திரம்..!

ஆயில்
ஆயில்

உடலுக்கு ஆரோக்கியம் கொடுத்துவந்த பல பாரம்பர்ய முறைகள் இன்று பெரும்பாலும் நம்மிடையே இல்லை. அதில் அழிவின் விளிம்பில் இருக்கும் மரச்செக்கு எண்ணெய்யும் ஒன்று. ஆனால், சமீப காலமாக மக்களிடையே ஏற்பட்ட விழிப்பு உணர்வின் காரணமாக ஓரளவு மரச்செக்கு எண்ணெய்  பிரபலமடையத் தொடங்கியுள்ளது. இதற்குக் காரணம் வெளியே கிடைக்கும் எண்ணெய் வகைகளில் பெரும்பாலானவை கலப்படம் செய்யப்பட்டது என்பதுதான்.

oil

நாம் உண்ணும் உணவில் ஏதாவது ஒரு வகையில் எண்ணெய் கலந்திருக்கும். இந்த அளவுக்கு உடலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய்களை வாங்கும் மக்களும் சுத்தமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அதனால்தான் மரச்செக்கு எண்ணெய் வகைகள் பிரபலமடையத் தொடங்கியுள்ளன. பளபளக்கும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனையாகும் எண்ணெய்கள் உடலுக்கு நன்மை தருகிறதா என்றால் கேள்விக்குறிதான். மரச்செக்கு என்று சொல்லி விற்கப்படும் எண்ணெய்களிலும் போலியானவை கலந்திருக்கிறது. நேரிலேயே வரவழைத்து நம் கண்முன்னே செக்கை ஆட்டிக் கொடுக்கும் மரச்செக்குகளும் இருக்கத்தான் செய்கின்றன. 

oil

இந்நிலையில் எண்ணெய் கலப்படத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், எண்ணெய் அதிகமாக உபயோகப்படுத்தும் மக்களுக்குத் தூய எண்ணெய் பெறும் வகையில் நாமே நம் வீட்டில் உபயோகப்படுத்திக் கொள்ளும் வகையில் இயந்திரம் ஒன்று சந்தையில் அறிமுகமாகியுள்ளது. கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒர்த் கண்ட்ரோல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கடந்த மூன்று வருடங்களாக  'SEEDS2OIL' என்ற எளிய வகையான, வீட்டிலேயே எண்ணை பிழியும் இயந்திரத்தை உருவாக்கி உள்ளனர்.

அதனை இந்தியா மற்றும் 15க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு  வினியோகஸ்தர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறார்கள். இந்த இயந்திரத்தை கொண்டு வீட்டிலேயே கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், போன்ற அனைத்து விதமான சமையலுக்கு தேவையான சுத்தமான, ஆரோக்கியமான எண்ணை வகைகளை நமக்கு தேவையான அளவு அவ்வப்போது மட்டுமல்லாது, மொத்தமாகவும் பிழிந்து எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

oil

 அத்தோடு பாதம், பிஸ்தா, போன்ற எண்ணை வகைகளையும், நாமே சுத்தமான முறையில் அரைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். நமது வீடுகளில் இருக்க வேண்டிய முக்கியாமான பொருட்களில் இதுவும் ஒன்று.   அனைவரும் வாங்கிப் பயன்படும் விதமாக  குறைந்த விலையில், அதிக தரத்தோடு இந்த இயந்திரத்தை தயாரித்துள்ளனர்.  SEEDS2OIL COMFORT வீடுகளில் பயன்படுத்தவும், வணிகமுறைகாக SEEDS2OIL MEGA என்ற இரு இயந்திரங்களை அறிமுகப்படுத்தி உள்ளது இந்த நிறுவனம். 
 

2018 TopTamilNews. All rights reserved.