“நீட் தேர்வு என்பது சமூக அநீதி; முதலில் அதை அழிப்போம்” : கவிஞர் வைரமுத்து உருக்கம்!

 

“நீட் தேர்வு என்பது சமூக அநீதி; முதலில் அதை அழிப்போம்” : கவிஞர் வைரமுத்து உருக்கம்!

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வானது பல எதிர்ப்புகளுக்கிடையே நாளை மதியம் 2 மணிக்கு நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இந்த தேர்வை எதிர்கொள்ள முடியாமல் திணறும் தமிழக மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்கதையாகி உள்ளது.

“நீட் தேர்வு என்பது சமூக அநீதி; முதலில் அதை அழிப்போம்” : கவிஞர் வைரமுத்து உருக்கம்!

அந்த வகையில் மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் முருகசுந்தரத்தின் மகள் ஜோதி ஸ்ரீ துர்கா நீட் தேர்விற்கு தயாராகி வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்த இவர் இந்தாண்டு நீட் தேர்விற்கு தயாராகி வந்த நிலையில் நீட் தேர்வு குறித்த அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுக்குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில், “ஓ! மாணவ மகன்களே! மகள்களே! நீட் என்பது தேர்வுமல்ல; தற்கொலை என்பது தீர்வுமல்ல. பிறக்கும் யாருக்கும் தங்களை அழிக்கும் உரிமை இல்லை. அழிக்க வேண்டியது அநீதியைத்தான்; உயிர்களை அல்ல. நீட் தேர்வு என்பது சமூக அநீதி; முதலில் அதை அழிப்போம். நீங்கள் வாழப் பிறந்தவர்கள்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.