கொரோனா விதிமீறல்: சென்னையில் 2 நாட்களில் கிட்டத்தட்ட ரூ.2 கோடி அபராதம் வசூல்!

 

கொரோனா விதிமீறல்: சென்னையில் 2 நாட்களில் கிட்டத்தட்ட ரூ.2 கோடி அபராதம் வசூல்!

சென்னையில் கொரோனா விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.1.93 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருவது என்பது அனைவரும் அறிந்தவையே. உயிர்க் கொல்லியான இந்த கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள கட்டாயம் மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனால் அதனை கருத்தில் கொள்ளாத மக்களோ, போதிய விழுப்புணர்வு இல்லாமல் மாஸ்க் போடாமல் சுற்றித் திரிகின்றனர். பல நாட்களுக்கு பிறகு இயக்கப்பட்டு வரும் பேருந்துகளில் கூட தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை என புகார்கள் எழுகிறது.

கொரோனா விதிமீறல்: சென்னையில் 2 நாட்களில் கிட்டத்தட்ட ரூ.2 கோடி அபராதம் வசூல்!

இவ்வாறு இருக்கும் சூழலில் மக்களிடம் கொரோனாவின் தீவிரத்தை பற்றிய புரிதலை உண்டாக்க, அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்தது. அதன் படி, சென்னையில் ஆங்காங்கே சோதனையில் ஈடுபடும் அதிகாரிகள் மாஸ்க் அணியாத, தனிமனித இடைவெளி பின்பற்றாத நபர்களிடம் இருந்து அபராதம் வசூலித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் பொதுமுடக்க விதிகளை மீறியவர்களிடம் இருந்து 2 நாட்களில் ரூ.1.93 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதிகபட்சமாக தேனாம்பேட்டை, பெருங்குடி, அம்பத்தூரில் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.