மம்தா, ஸ்டாலின் வெற்றிமுகம்… பிரசாந்த் கிஷோர் எடுத்த அதிர்ச்சி முடிவு!

 

மம்தா, ஸ்டாலின் வெற்றிமுகம்… பிரசாந்த் கிஷோர் எடுத்த அதிர்ச்சி முடிவு!

அரசியல் களத்தின் நவீன சாணக்கியன் என்று அழைக்கபடுகிறார் பிரசாந்த் கிஷோர். அந்தளவிற்கு இந்திய அரசியலில் பெரும் வீச்சை ஏற்படுத்தியுள்ளார் என்றே சொல்ல வேண்டும். இப்போது கூட மேற்கு வங்கத்தில் மம்தாவையும், தமிழ்நாட்டில் ஸ்டாலினையும் அரியணையில் அமர்த்தி வைக்கவுள்ளார். மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கும் பாஜகவுக்கும் இருந்த போட்டியை விட பிரசாந்த் கிஷோருக்கும் பாஜகவுக்குமே பலத்த போட்டி இருந்தது.

மம்தா, ஸ்டாலின் வெற்றிமுகம்… பிரசாந்த் கிஷோர் எடுத்த அதிர்ச்சி முடிவு!

மேற்கு வங்கத்தில் பாஜக 100 இடங்களுக்கு மேல் ஜெயித்துவிட்டால் நான் தேர்தல் வியூக பணியிலிருந்து ஒதுங்கிவிடுவேன் என்று சவால் விடுத்தார். இதற்கு நடுவே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக 100க்கும் மேலான இடங்களில் வெற்றிபெறும் என்று கூறியிருந்தது. ஆனால் அந்த முடிவுகளைத் தவிடுபொடியாக்கி மம்தாவின் திருணாமுல் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிமுகத்துடன் இருக்கிறது. பாஜகவோ 86 இடங்களிலேயே முன்னிலையில் உள்ளது.

மம்தா, ஸ்டாலின் வெற்றிமுகம்… பிரசாந்த் கிஷோர் எடுத்த அதிர்ச்சி முடிவு!

பிரசாந்த் கிஷோர் சொன்னபடியே பாஜக 100 இடங்களைக் கூட ஜெயிக்காது என்பது முடிவுகளில் தெரியவந்துள்ளது. இச்சூழலில் தான் தேர்தல் வியூக பணிகளிலிருந்து விலகுவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். என்டிடிவி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் இக்கருத்தைக் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “தேர்தல் வியூகப் பணிகளில் நான் தொடர விரும்பவில்லை. இதுவரை என்ன செய்ய வேண்டுமோ அதைச் சிறப்பாகச் செய்துவிட்டேன். சிறிது காலம் ஓய்வெடுத்து வாழ்க்கையில் வேறு எதாவது செய்ய ஆசைப்படுகிறேன். நான் ஒரு அரசியல்வாதியாக தோல்வியுற்றிருக்கிறேன். நான் அரசியலுக்குத் திரும்பி வெற்றிபெற முயற்சிப்பேன்” என்றார்.