Home அரசியல் `கொங்கு மண்டலத்தில் வீழ்ந்த திமுக; ஏக குஷியில் அதிமுக!'- சர்வே ரிசல்ட்டால் அதிர்ந்த மு.க.ஸ்டாலின்

`கொங்கு மண்டலத்தில் வீழ்ந்த திமுக; ஏக குஷியில் அதிமுக!’- சர்வே ரிசல்ட்டால் அதிர்ந்த மு.க.ஸ்டாலின்

2016ம் ஆண்டு தேர்தலை யாரும் மறந்துவிட முடியாது. காங்கிரஸ், திமுகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது. விஜயகாந்த் தலைமையில் மக்கள் நல கூட்டணி உருவாகி போட்டியிட்டது. அதிமுக தனித்துப் போட்டியிட்டது. 5 ஆண்டு ஆட்சியை முடித்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, தனித்துப்போட்டியிட்டது. தனி ஒருவராக பிரசாரத்தில் முழங்கிய ஜெயலலிதா, கொங்கு மண்டலம் என அழைக்கப்படும் மேற்கு மாவட்டத்தில், “என் கண்ணுக்கு தெரிந்த வரையில் தமிழக அரசியல் அரங்கில் நம் கழகத்துக்கு எதிரிகளே இல்லை. தனிப்பெரும் இயக்கமாய்க் களம் காண்கிறோம். தி.மு.க. உள்ளிட்டவையெல்லாம் அ.தி.மு.க.வை எதிர்த்து நிற்கும் திராணியற்றவர்களாக, ஒதுங்கி, ஒடுங்கிக் கிடக்கிறார்கள்” என்று கர்ஜித்தார்.

ஜெயலலிதாவின் சூறாவளி பிரசாரம் அதிமுகவுக்கு வெற்றி வாகையை சூட்டி தந்தது. கொங்கு மண்டலத்தை கைப்பற்றிய அதிமுக, திமுகவை வாஸ்அவுட் செய்தது. கோவையில் உள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளையும், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது. திமுக ஆறுதல் படும் விதமாக திருப்பூரில் 2 தொகுதிகளை தி.மு.க. கூட்டணிக்கு கிடைத்தது.

மீண்டும் ஆட்சியை கைப்பற்றி அதிமுக, அரியணை ஏறியது. முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்து சொன்ன சென்ற எஸ்.பி.வேலுமணியிடம், ‘நம் கழகம் ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க மிகப்பெரிய அளவில் கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்கள் கைகொடுத்துள்ளன. அந்த மக்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டவர்களாய் இருக்கிறோம்’ என்றார். அதனை மெய்ப்பிக்கும் விதமாக கொங்கு மண்டலத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், கருப்பணன், உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், சரோஜா ஆகியோரை அமைச்சராக்கினார்.

2016 தேர்தலில் ஆளும்கட்சிக்கு கைகொடுத்த கொங்கு மக்கள், வரும் 2021 தேர்தலிலும் கைகொடுப்பார்கள் என்று அண்மையில் எடுக்கப்பட்ட சர்வேக்கள் கூறுகிறது. இதனால் ஆளுங்கட்சிய குஷியில் உள்ளது. சர்வே குறித்து பேசிய கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் வேலுமணி “தமிழகத்தில் நல்ல பல திட்டங்களை நம் அரசு செயல்படுத்துவதால், மக்கள் நம் மீது நல்ல அபிமானத்தில் உள்ளனர். சூழல் மிக நன்றாக உள்ளது. எனவே மக்களோடு மக்களாக இருந்து, சேவையாற்றிட வேண்டும் கழக நிர்வாகிகள். கோவை மாவட்டம் ஐம்பது ஆண்டு காலமாய் காணாத வளர்ச்சியை வெறும் ஐந்தே ஆண்டுகளில் கண்டுள்ளது. எனவே கோவை மாவட்டமானது நம் கழகத்தின் இரும்புக் கோட்டை என்பதை எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் நிரூபிப்போம். கோவையில் கட்சி பெரும் வெற்றி பெற்றால், சட்டமன்றத்தில் நம் ஆட்சி அமையும்! என்பது சென்டிமெண்ட். இந்த முறையும் அதை நிரூபணமாக்குவோம்” என்றார் உற்சாகமாய்.

இந்த சர்வே முடிவு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கொங்கு மண்டலம் என்றால் திமுகவுக்கு அலர்ஜிதான். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றிய தி.மு.க., தற்போது அங்கு செல்வாக்கு முன்பைவிட 3 மடங்கு சரிந்துள்ளதாக சர்வே கூறுகிறது. மீண்டும் அதிமுக கைக்கு ஆட்சி போய்விடுமா என்ற ஷாக்கில் இருக்கிறாராம் ஸ்டாலின்.

கொரோனா காலத்தில் “ஒன்றிணையோம் வா” என்ற திட்டத்தை செயல்படுத்திய மு.க.ஸ்டாலின், வறுமையில் தவித்த மக்களுக்கு உதவி கரம் நீட்டினார். இது மக்கள் மத்தியில் திமுகவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. தற்போது, வட மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிரசாந்த் கிஷோர் கையில் திமுக வெற்றி இருக்கிறது. மக்களை நம்பி திமுக இல்லை என்பதே இவரின் வரவு காட்டுகிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

மாவட்ட செய்திகள்

Most Popular

வாணியம்பாடி எருது விடும் விழா- 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு…

திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட...

காலில் ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்யவேண்டியுள்ளதால் சில நாட்கள் ஓய்வு தேவை- கமல்ஹாசன்

என் மீது அன்பு கொண்டவர்களுக்கு ஓர் அறிவிப்பு என மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை அப்போலோ மருத்துவமனையில் நடிகர் கமல்ஹாசனுக்கு...

சாலை விபத்தில் மகனை இழந்த பெற்றோருக்கு இழப்பீடு பெற உரிமை உள்ளது- டெல்லி உயர்நீதிமன்றம்

சாலை விபத்தில் தங்களது பிள்ளைகளை இழந்த பெற்றோர்களுக்கு இழப்பீடு பெறும் உரிமை உள்ளது என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் இந்த தீர்ப்பின் நகலை அனைத்து மோட்டார் விபத்து...

அணை பகுதியில் குளித்த இளைஞர் நீரில் முழ்கி உயிரிழப்பு

மதுரை மதுரை அருகே நீர்த் தேக்கத்தில் குளித்த இளைஞர் ஒருவர், எதிர்பாராத விதமாக நீரில் மூழகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!