போக்சோ விதிகளை மீறி பொய் சொல்லிய ட்விட்டர்… தடைசெய்ய குழந்தைகள் ஆணையம் போர்க்கொடி!

 

போக்சோ விதிகளை மீறி பொய் சொல்லிய ட்விட்டர்… தடைசெய்ய குழந்தைகள் ஆணையம் போர்க்கொடி!

ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது. டெல்லி விவசாயிகளின் போராட்டத்தில் ஆரம்பித்த பிரச்சினை இன்னமும் முடிந்த பாடில்லை. மத்திய அரசு உத்தரவிடுவதும் ட்விட்டர் அதற்கு மறுப்பு தெரிவிப்பதுமாக நான்கு மாதங்கள் மறைமுக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது புதிய ஐடி சட்ட விதிகள் விரிசலை மேலும் அதிகரித்துள்ளது. மற்ற சமூக வலைதளங்கள் மத்திய அரசுடன் உடன்பட்டாலும், ட்விட்டர் அடம்பிடிக்கிறது. பயனர்களின் கருத்துரிமைக்கே தாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம் என்ற முடிவில் தீர்க்கமாக இருக்கிறது.

போக்சோ விதிகளை மீறி பொய் சொல்லிய ட்விட்டர்… தடைசெய்ய குழந்தைகள் ஆணையம் போர்க்கொடி!
போக்சோ விதிகளை மீறி பொய் சொல்லிய ட்விட்டர்… தடைசெய்ய குழந்தைகள் ஆணையம் போர்க்கொடி!

இச்சூழலில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் ட்விட்டருக்கு எதிராக கிளம்பியிருக்கிறது. ட்விட்டரின் இந்திய பிரிவு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணையில் பொய் சொல்வதாகவும், போக்சோ சட்டங்களை மீறியதாகவும் குற்றஞ்சாட்ட்டியுள்ளது. ட்விட்டர் இந்தியா மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் எனவும் டெல்லி காவல் துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளது. ட்விட்டர் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானது என்று கருதப்பட்டு, புதிய ஐடி விதிகளைப் பின்பற்ற தொடங்கும் வரை ஒரு வாரத்திற்கு குழந்தைகள் ட்விட்டருக்கு செல்வதைத் தடுக்குமாறு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கும் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பானவை பரப்பப்படுவது தொடர்பான வழக்கை ஆணையம் விசாரித்து வருகிறது. கடந்த ஆண்டு இதுதொடர்பாகப் பதிலளிக்க சமூக வலைதளங்களுக்கும் கூகுள் போன்ற வலைதளங்களுக்கும் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. ட்விட்டர் இந்தியாவிடம் விசாரணை செய்தபோது, குழந்தைகள் தொடர்பாக ட்விட்டரில் பகிரப்படும் அனைத்திற்கும் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ட்விட்டர் நிறுவனமே பொறுப்பு என்று கூறியிருக்கிறது. இதை நம்பிய ஆணையம் மேற்கொண்டு விசாரணையை அமெரிக்க ட்விட்டரிடம் நடத்த முடிவெடுத்துள்ளது.

போக்சோ விதிகளை மீறி பொய் சொல்லிய ட்விட்டர்… தடைசெய்ய குழந்தைகள் ஆணையம் போர்க்கொடி!

ஆனால் அதற்குப் பிறகு தான் தெரியவந்திருக்கிறது. ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் 10 ஆயிரம் பங்குகளில் 9 ஆயிரத்து 999 பங்குகளை அந்நிறுவனமே வைத்துள்ளது. அதேபோல இந்திய போக்சோ விதிகளை ட்விட்டர் இந்தியா தான் மீறியிருக்கிறது. வேண்டுமென்றே ட்விட்டர் இந்தியா தங்களிடம் பொய் சொல்லிவிட்டது என ஆணையம் கொந்தளித்திருக்கிறது.

போக்சோ விதிகளை மீறி பொய் சொல்லிய ட்விட்டர்… தடைசெய்ய குழந்தைகள் ஆணையம் போர்க்கொடி!

இதன் எதிரொலியாகவே ட்விட்டர் இந்தியா மீது வழக்கு பதிய சொல்லியிருக்கிறது. குழந்தைகள் மீது இச்சை கொள்ளும் காமுகர் உலாவும் தளமாக ட்விட்டர் இருப்பதால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும். ஆகையால் ட்விட்டர் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது தான் என்று நிரூபிக்கும் வரை அவர்கள் பயன்படுத்த தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.