Home அரசியல் மகாராஷ்டிரா நிலவரம் தொடர்பாக சரத் பவார் தனது கட்சி தலைவர்களுடன் மட்டும் ஆலோசனை...

மகாராஷ்டிரா நிலவரம் தொடர்பாக சரத் பவார் தனது கட்சி தலைவர்களுடன் மட்டும் ஆலோசனை…

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகிளன் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. தற்போது அம்மாநிலம் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், லாக்டவுன் காரணமாக பொருளாதார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

சரத் பவார்

இந்த சூழ்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று தனது கட்சி தலைவர்ளுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். அந்த கூட்டத்தில், மகாராஷ்டிராவின் கொரோனா வைரஸ் நிலவரம், பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தனது கட்சி தலைவர்களுடன் சரத் பவார் ஆலோசனை செய்ததாக தகவல். இந்த கூட்டத்தில் மாநிலத்தின் துணை முதல்வர் அஜித் பவார், அமைச்சர்கள் ஜெயந்த் பாட்டீல், நவாப் மாலிக், ஹசன் முஷெரிப், அனில் தேஷ்முக், சாகன் பூஜ்வால், ஜிதேந்திர அவாத் மற்றும் அதிதி தார்கரே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சூலே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அஜித் பவார்

இந்த கூட்டம் தொடர்பாக அந்த கட்சியின் மூத்த தலைவர் டிவிட்டரில், மும்பையில் யஷ்வந்த்ராவ் சவான் சென்டரில் பவார் முன்னிலையில் கூட்டம் நடைபெற்ற கூட்டத்தில் கோவிட்-19 காரணமாக மாநிலத்தின் பொருளாதாரம், சமூக பிரச்சினைகள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கட்சி விஷயங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என பதிவு செய்து இருந்தார். மும்பையில் கனமழை பெய்த போதிலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular

கொரோனாவே ரஜினி அரசியல் வருகைக்கு தடையாக இருக்க காரணம்! சமாளிக்கும் கராத்தே தியாகராஜன்

ரஜினியின் அரசியல் வருகையை மக்கள் எதிர்பார்க்கிறார்களே இல்லை, அவரது மன்ற நிர்வாகிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி கூறி 2 ஆண்டுகள் ஆகின்றன. இதற்காக தனது...

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை தளர்த்தியதால் வந்த விபரீதம்

சென்னையில் மேலும் 1,280 பேருக்கும் பிற மாவட்டங்களில் 4,511பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று...

வேளாண் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவசாயிகள் உற்பத்தி மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா, விலை உறுதி மற்றும்...

பெரியார் சிலை அவமதிப்பு; பாஜகவை குறை சொல்லாதீங்க- அண்ணாமலை

பெரியார் சிலைக்கு காவி துண்டு அணிவித்த விவகாரத்தில் பா.ஜ.க வை குறை சொல்ல வேண்டாம் என அக்கட்சியின் துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளர். திருச்சி மாவட்டம்...
Do NOT follow this link or you will be banned from the site!