கன்னியாகுமரி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டி?

 

கன்னியாகுமரி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டி?

பிரபல தொழில் அதிபரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான வசந்தகுமார் கடந்த ஆகஸ்டு மாதம் 28-ம் தேதி மரணமடைந்தார். அவரது.மறைவை அடுத்து கன்னியாகுமரி தொகுதி காலியாக இருக்கிறது. அத் தொகுதிக்கு பிப்ரவரி மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்துவதற்காக ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்திருந்தார்.

கன்னியாகுமரி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டி?


தற்போது கன்னியாகுமரி தொகுதிக்கான வேட்பாளர்கள் பற்றிய ஆலோசனைகளை அனைத்துக் கட்சிகளும் நடத்தி வருகின்றன. இதில் பா.ஜ.க. சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரான நயினார் நாகேந்திரன், வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனத் தெரிகிறது. இது குறித்து

கன்னியாகுமரி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டி?

அவர் ஏற்கெனவே பல முறை விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தொகுதியில் கடந்த 2009-ல் நடந்த தேர்தலில் தி.மு.க.வும்,. 2014-ல் நடந்த தேர்தலில் பா.ஜ.கவும். 2019-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றது.